வெள்ளி, 10 அக்டோபர், 2014

அரிசி

அரிசி நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, ஆனால் இதன் பலன்கள் தெரியாமலேயே பலர் சமீபகாலமாக அரிசியை தவிர்த்து கோதுமைக்கு மாறி வருகின்றனர்.
இதனால் எடை குறையும் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கருத்து தவறு.
எனவே இப்போது அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளையும் பற்றி நாம் பார்ப்போம்.
* கருங்குறுவை என்ற கறுப்பு நிற அரிசி, செங்குறுவை என்ற சிகப்பு நிற அரிசிலும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருப்பதால் அவை உயிரணுக்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கும்.
* அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லாவற்றிலும் நல்ல மருத்துவ குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன.
* பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* மணிச்சம்பா அரிசியை உட்கொள்வதன் மூலம் ரத்தச் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
* மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம். இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
* விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க(கெட்ட நீரை போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன.
* வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் பச்சரிசிச் சாதம் சாப்பிடக்கூடாது மற்றும் நன்கு ஜீரணமாக புளுங்கல் அரிசியை சாப்பிட வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமம் அல்ல


ஆணும் பெண்ணும் சமம் அல்ல;;;


பெண்களின் மூளை ஒரே நேரத்தில்

 பலபணிகளை செய்யக்கூடியவகையில் 

வடிவமைக்கப்பட்டுள்ளது!

உதாரணாமக பெண்ணால்,

தொலைக்காட்ச்சி 

பார்த்துக்கொண்டே தொலைபேசியில்

பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு 

தேவையான பணிவிடையையும் செய்ய 

முடியும். 

( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில்

ஒரு பணியை செய்யக்கூடியவகையில்

வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஆண்களால்

தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே 

தொலைபேசியில்

பேச முடியாது! ( அவர்களின் கவனம்

தொலைக்காட்சியில் இருக்கும்

அல்லது தொலை பேசியில் இருக்கும்.

இரண்டிலும் இருக்காது! )


மொழி;

பெண்களால் இலகுவாக பல

மொழிகளைக்கற்றுக்கொள்ள

முடியும்! அதனால் தான் சிறந்த

மொழி பெயர்ப்பாளர்கள் பலர்

பெண்களாக இருக்கின்றார்கள். 3

வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும்

போது அதே வயது பெண்குழந்தை 

அதிகபடியான 

சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும்

மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல

பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து 

தீர்மானத்திற்குரிய

படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் 

மூளையில்

பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது.

அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான

தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின்

மூளையால் இலகுவாக

ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால், பெண்களின் மூளையால்

இதை செய்ய முடியாது.

அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் 

வைக்கும் தீர்மானத்தையும்

உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்;

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,

தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், 

பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் 

ஏற்பட

இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் 

கூட்டியே விரைவாக கணித்து அதற்கு 

ஏற்றபோல்

நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் 

மூளையால்

முடியும்.

ஆனால், பெண்களின்

மூளை தாமதமாகவே இந்த

கணிப்புக்களை மேற்கொள்ளும்.

இதற்கு காரணம், ஆண்களின்

“ஒரு பணியை செய்யக்கூடிய 

மூளைத்திறன்”ஆகும்.

உதாரணமாக வாகனம் செலுத்தும்

போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்

ஆண்களின் கவணம் வாகனம்

செலுத்துவதில் தான் இருக்கும்.

பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும்.

அதனால் வாகனங்களை செலுத்துவதில்

பெண்கள்

சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் 

போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் 

பெண்கள் ஜாக்கிரதை).
பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் 

பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய்

என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், 

பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது 

ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் 

மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 

சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி 

கொண்டு இருப்பார்கள். ) எ

காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக

மொழியையும் 20% உடல்

மொழிகளையும் 10% ஆன வாய்

மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின்

மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:

பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் 

மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும்

தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும்

தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.

இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் 

தனிமையில்

தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள

ஒரு பெண்னின்

மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக

பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம்

தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக

சொல்வதனூடாக

திருப்தியடைந்துகொள்ளும்.

சொன்னதன் பின்னர்,

பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள்

நின்மதியாக படுத்துறங்குவார்கள்.

தேவைகள்:

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய

செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் 

தேவைகள் அமைந்திருக்கும்.

ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்

பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:

ஒரு பெண்ணிற்கு தனது காதல்/

உறவுகளிடையே பிரச்சனை அல்லது 

திருப்தியின்மை இருந்தால்…

அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்

செலுத்த முடியாது.

ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில்

பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ 

உறவுகளில்

கவணம் செலுத்த முடியாது.

உரையாடல்;

பெண்கள் உரையாடும் போது மறைமுக

மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.

ஆனால், ஆண்கள்

நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து 

கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் 

பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் 

சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் 

பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி 

யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய 

என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது 

முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா 

அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் 

என்று எல்லார் பிறந்த தினமும் மனதில 

வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு 

சுலபமானது.

நடவடிக்கை;

பெண்கள் சிந்திக்காமல் அதிகம்

பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம்

செய்வார்கள்!

ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்

ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான 

அறிவியல்

காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

ஆரோக்கியமான வாழ்க்கை




படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் 

சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்:

ஆரோக்கியமான வாழ்க்கையை 

கையாளுங்கள் :
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்

கையில் சிறிதளவு உப்பைத்

தடவிக் கொண்டால் கையில்

சப்பாத்தி மாவு ஒட்டாது.


*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்

பாத்திரங்களை கழுவினால்

பாத்திரங்கள் பளபளப்பாக

இருக்கும்.



*அரிசி மற்றும் காய்கறிகள்

கழுவிய தண்ணீரை வீணாக்காமல்

செடிகளுக்கு ஊற்றினால்

செடிகள் செழிப்பாக இருக்கும்.



*வெயில் காலத்தில் பெருங்காயம்

கட்டியாகி விடும்.

அப்படி ஆகாமலிருக்க

பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்

பெருங்காய டப்பாவில் போட்டால்

பஞ்சு போல் மிருதுவாக

இருக்கும்.


*ரவா,மைதா உள்ள டப்பாவில்

பூச்சி, புழுக்கள் வராமல்

இருப்பதற்கு கொஞ்சம்

வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,

புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்

இருக்க இஞ்சியின்

தோலை சீவி விட்டு கொஞ்சம்

தட்டி தயிரில் போட்டால்

புளிக்கவே புளிக்காது.

*காய்கறிகளை வேகவைக்கும்போது

அதிக தண்ணீர் வைத்து வேக

வைக்க கூடாது. ஏன் என்றால்

காய்கறிகளில் உள்ள வைட்டமின்

சத்துகள் போய்விடும். அதில்

உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த

மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.

அவை வராமல்

இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்

நெடி வராது.


*பச்சை மிளகாயை காம்புடன்

வைக்காமல்

காம்பை எடுத்து விட்டு நிழலான

இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.


*நெய் ப்ரெஷ்ஷாக

இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை 

போட்டு வைத்தால்

ப்ரெஷ்ஷாக இருக்கும்.


*காபி டிகாஷன்

போடுவதற்கு முன்

சுடு தண்ணீரில் டிகாஷன்

பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்

போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்

இறங்கிவிடும்.


*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்

இருப்பதற்காக சீடையை ஊசியால்

குத்திய பிறகு எண்ணெய்யில்

போட்டால் வெடிக்காது.


*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்

கட்டையில் முதலில்

உருண்டையாக

போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக

மடித்து உருட்டி போட்டால்

சப்பாத்தி மிருதுவாக

இருக்கும்.


*முட்டைகோசில் உள்ள

தண்டை வீணாக்காமல் சாம்பாரில்

போட்டு சாப்பிட்டால் மிகவும்

சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும்

போது ஒரு கரண்டி பால்

சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்

விரிந்து போகாமல் இருக்கும்.


*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்

வைக்கும்போது உப்பைத்

துணியில் முடிந்து வைத்தால்

காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக

மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,

கொத்தமல்லி போன்றவற்றை ஒரு 

பாத்திரத்தில்

போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்

அரைத்து சாம்பாரில் போட்டால்

கூடுதல் சுவையாக இருக்கும்.


*சமையலில் உப்பு அதிகமாக

போய்விட்டால்

உருளைகிழங்கை அதில்

அறிந்து போட்டால்

உப்பை எடுத்துவிடும்.


*தோசை சுடும்போது தோசைக்கல்லில்

மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்

இருந்தால் அதற்கு கொஞ்சம்

புளியை ஒரு வெள்ளைத்துணியில்

கட்டி, அதை எண்ணெய்யில்

தொட்டு கல்லில்

தேய்த்துவிட்டு தோசை சுட்டால்

நன்றாக வரும்.