சனி, 30 மே, 2015

செட்டிநாடு சிக்கன்

செட்டிநாடு சிக்கன் க்கான பட முடிவு




என்னென்ன தேவை?

சிக்கன்- அரைகிலோ


சின்ன வெங்காயம்-கால் கிலோ


சீரகத்தூள்-5ஸ்பூன்


இஞ்சி, பூண்டு விழுது- 3ஸ்பூன்


மஞ்சள் தூள்- 1ஸ்பூன்


வத்தல் தூள்-2ஸ்பூன்


மல்லித்தூள்-2ஸ்பூன்


தேங்காய்- அரை முறி


உப்பு- தேவையான அளவு


எண்ணெய்- தேவையான அளவு



எப்படி செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் அல்லது பிரஷர்


 பேனில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும்

 நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு

 பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

 பின்னர் சீரகத்தூள், மஞ்சள் தூள், போட்டு

 வதக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி பூண்டு

 விழுதை அதில் சேர்க்க வேண்டும்.  அதன்

 பின்னர் துண்டுகளாக நறுக்கிய சிக்கனை

 போட்டு உப்பு சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வதக்க

 வேண்டும். பின்னர் வத்தல் தூள், மல்லித்தூள்

 போட்டு 5நிமிடம் வதக்கிய பின்னர் தேங்காய்

 பால் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு கொதிக்க

 விடவேண்டும். அடிப்பிடிக்காமல் 30நிமிடம்

 வரை வேக வைக்க வேண்டும். இறக்கிய

 பின்னர் மல்லி இலைகளை அதன் மீது

 தூவினால் செட்டிநாடு சிக்கன்  தயார். 

இதனை சாதம் சப்பாத்தி, இட்லி, தோசை 

ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். 

திங்கள், 25 மே, 2015

Chilli இட்லி

சில்லி இட்லி க்கான பட முடிவு



சில்லி இட்லி செய்முறை !!!

தேவையானவை

இட்லி – 8
மைதா மாவு – 2 ஸ்பூன்

சோள மாவு – 1/2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

வெங்காயம் – 1/2 கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2

மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 

சோயா சாஸ், தக்காளி சாஸ் – தேவைகேற்ப
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி 
பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 
இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி 
பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, 
பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் 
ஆகியவற்றை வதக்கவும்

இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி 
சாஸ் சேர்த்து கிரேவியாக சமைக்கவும்.

இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்துவைத்த 
இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்தால் 
சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.

காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? 
உடனடியாக உப்மா செய்யாலாம் என 
யோசிக்காமல், இந்த மஞ்சூரியனை செய்து 
பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த சில்லி 
இட்லி சூப்பராக இருக்கும்.

ஞாயிறு, 24 மே, 2015

மொஹல் சிக்கன் கிரேவி

மொஹல் சிக்கன் கிரேவி க்கான பட முடிவு



மொஹல்  சிக்கன் கிரேவி

என்னென்ன தேவை?

சிக்கன் - அரைக் கிலோ


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

வர மிளகாய் - 8

மல்லி - 4 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - 3 இன்ச் அளவு

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3

எப்படி செய்வது?

சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

 பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு

 சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி 

மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து 

அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 

தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர 

மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, 

சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு 

வறுக்கவும்.

இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு 

எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் 

ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய 

வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். 

பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை 

ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த 

சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு 

கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் 

பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான மொஹல்  சிக்கன் கிரேவி ரெடி.

Chettinad பால் பணியாரம்

பால் பணியாரம் க்கான பட முடிவு



செட்டிநாடு பால் பணியாரம் !!

என்னென்ன தேவை?


பச்சரிசி -1 ஆழாக்கு

உளுத்தம் பருப்பு-3/4 ஆழாக்கு

சர்க்கரை-100கிராம்

பால்- 1/2லிட்டர்

எண்ணெய்- 1/4 லிட்டர்
உப்பு- 1சிட்டிகை
எப்படி செய்வது?

அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து 
அதிகம் 
தண்ணீர் இல்லாமல் நைஸாக 

அரைத்துக்கொள்ளவும். எண்ணெய்யைக் 
காயவைத்து அதில் அரைத்த மாவை கோலி 
அளவுள்ள உருண்டைகளாக உருட்டி போட்டு 
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பாலுடன் 
சிறிதளவு நீர் சேர்த்து காய்ச்சி சர்க்கரையை 
கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் 
பொரித்து 
வைத்துள்ள பணியாரங்களை வெந்நீரில் 
கொட்டி உடனே எடுத்து பாலில் போடவும். 
அதிகம் ஊறினால் பணியாரம் கரைந்து போகும்.

சனி, 23 மே, 2015

வாழைக்காய் பொறியல்

வாழைக்காய் பொரியல் க்கான பட முடிவு



வாழைக்காய் பொறியல் 

என்னென்ன தேவை?

வாழைக்காய் - 1,
 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 

இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு,

உப்பு - தேவைக்கு,

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், 

கடுகு - 1/2 டீஸ்பூன், 

சீரகம் - 1/2 டீஸ்பூன்.

வறுத்து, பொடிக்க...

உளுந்தம் பருப்பு - 3 டீஸ்பூன், 

துவரம் பருப்பு - 3 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - 10 இலைகள்,

காய்ந்த மிளகாய் - 2, 

எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?


வாழைக்காயை தோல் சீவி, இரண்டாக வெட்டிக்

 கொள்ளவும். மஞ்சள் தூள், இஞ்சி சேர்த்து

 மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக 

வைக்கவும் (குழைய விடாமல் வேக விடவும்).

 ஆறிய பின் வாழைக்காயைத் துருவிக்

 கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள 

பொருட்களை சில சொட்டுகள் எண்ணெய் 

சேர்த்து வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,

 சீரகம், 

பெருங்காயத் தூள் தாளித்து துருவிய

 வாழைக்காய், பொடித்த பொடி, உப்பு சேர்த்து

 நன்கு கலக்கவும். இதை சாதத்துடன் கலந்து

 சாப்பிடலாம்....