சனி, 16 மே, 2015

இறால் சில்லி

இறால் சில்லி !!! க்கான பட முடிவு



இறால் சில்லி  !!!

என்னென்ன தேவை?

இறால்(சுத்தம் செய்தது) - 200கிராம்

பெரிய வெங்காயம் - 1

குடை மிளகாய் - 1

வெங்காயத்தாள் - 2கொத்து

பூண்டு - 10

சில்லி ஃப்லேக்ஸ் - 1டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 2டேபிள்ஸ்பூன்

ரெட்சில்லி சாஸ் - 2டேபிள்ஸ்பூன்

டொமெட்டோ சாஸ் - 3டேபிள்ஸ்பூன்

மிளகு தூள் - 1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

சர்க்கரை - 1டீஸ்பூன்

எண்ணெய் - 8டேபிள்ஸ்பூன்


எப்படிச் செய்வது?

முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு

 மிளகு தூள் சேர்த்து பிரட்டி 15நிமிடம் ஊற

 வைக்கவும். குடை மிளகாயை பெரிய

 துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய

 வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக 

நறுக்கி வைக்கவும். வெங்காயதாளையும்

 நறுக்கி கொள்ளவும். இறாலை எண்ணெயில் 

பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும்.

இப்போது பொரித்த எண்ணெயிலேயே, 

வெங்காயத்தை போட்டு சிம்மில் வைத்து 

10நிமிடம் நன்றாக வதக்கவும். பிறகு அதில்

 சில்லி ஃப்லேக்ஸ், இந்த கலவைக்கு மட்டும்

 தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா 

சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து

 சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி

 பிறகு குடை மிளகாய், வெங்காய தாள் சேர்த்து

 ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து 

பிரட்டி இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக