சனி, 30 மே, 2015

செட்டிநாடு சிக்கன்

செட்டிநாடு சிக்கன் க்கான பட முடிவு




என்னென்ன தேவை?

சிக்கன்- அரைகிலோ


சின்ன வெங்காயம்-கால் கிலோ


சீரகத்தூள்-5ஸ்பூன்


இஞ்சி, பூண்டு விழுது- 3ஸ்பூன்


மஞ்சள் தூள்- 1ஸ்பூன்


வத்தல் தூள்-2ஸ்பூன்


மல்லித்தூள்-2ஸ்பூன்


தேங்காய்- அரை முறி


உப்பு- தேவையான அளவு


எண்ணெய்- தேவையான அளவு



எப்படி செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் அல்லது பிரஷர்


 பேனில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும்

 நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு

 பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

 பின்னர் சீரகத்தூள், மஞ்சள் தூள், போட்டு

 வதக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி பூண்டு

 விழுதை அதில் சேர்க்க வேண்டும்.  அதன்

 பின்னர் துண்டுகளாக நறுக்கிய சிக்கனை

 போட்டு உப்பு சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வதக்க

 வேண்டும். பின்னர் வத்தல் தூள், மல்லித்தூள்

 போட்டு 5நிமிடம் வதக்கிய பின்னர் தேங்காய்

 பால் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு கொதிக்க

 விடவேண்டும். அடிப்பிடிக்காமல் 30நிமிடம்

 வரை வேக வைக்க வேண்டும். இறக்கிய

 பின்னர் மல்லி இலைகளை அதன் மீது

 தூவினால் செட்டிநாடு சிக்கன்  தயார். 

இதனை சாதம் சப்பாத்தி, இட்லி, தோசை 

ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். 

1 கருத்து:

  1. (அ) செய்முறையை மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இயன்றவரை தமிழிலேயே எழுதுகிறீர்கள். அதுவும் நன்றாக இருக்கிறது.

    (ஆ) வத்தல் தூள் என்பது என்னவென்று தெரியவில்லையே.. மிளகாய் வத்தலா? சுண்டை வத்தலா?

    (இ) தேங்காய் அரை முறி என்று எழுதியிருக்கிறீர்கள். முறி என்பது மூடி என்று சொல்லுகிறோமே, அதுவா?

    (ஈ) செட்டிநாட்டுச் சிக்கன் என்று இருக்கவேண்டுமோ? கோழ் எனும் சொல்லை யாருமே பயன்படுத்தமாட்டேன் என்கிறார்களே, ஏன்?

    (உ) "சமையல்காரர்" என்பது தரக்குறைவான சொல் என்பதுபோல chef என்றே யாவரும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். "சிக்கனைப் போட்டு", "கோரியாண்டரைப் போட்டு", "ஹாட் வாட்டரை ஊற்றி", "பெப்பரைத் தூவி" என்றேல்லாம் ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாகப் பேசியே தொலைக்காட்சியில் சமயல் நிகழ்ச்சிகளைச் செய்து காட்டுகிறார்கள். ஏராளமான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துபவரது பின்னணியை ஆராய்ந்தால், அவர்கள், பெரும்பாலும் பள்ளிக்கூடத்திற்கே போகாதவர்களாகக் கூட இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இது தாழ்வு மனப்பான்மையினால் நிகழ்வது என்றே தோன்றுகிறது.. வி.மு.பழ்.

    மேலும், அத்தகையோர், Non-stick Pan-ல் சமையல் செய்யும்போது, இரும்பால் ஆன கரண்டியினால் வறண்டிச் சமைப்பது கொடடூரமாகத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு