சனி, 23 மே, 2015

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி க்கான பட முடிவு



சுவையான ஸ்பெஷல் மட்டன் 

பிரியாணி:--

தேவையான பொருள்கள்: எம்பிரான் பாஸ்மதி

 அரிசி – 1 கிலோ, மட்டன் – 1 1/2 கிலோ, நெய் 250

 கிராம், தயிர் – 400 மில்லி (2 டம்ளர்), பூண்டு – 100

 கிராம், இஞ்சி – 75 கிராம் , பட்டை, கிராம்பு, ஏலம்

 – 3 வீதம், பெரிய வெங்காயம் – 1/2 கிலோ, 

தக்காளி – 1/4 கிலோ, பச்சை மிளகாய் – 50

 கிராம், எலுமிச்சை – 1, பொதினா,

 கொத்தமல்லிதழை – கையளவு, கேசரிப்பவுடர் – 
சிறிதளவு, முந்திரிப்பருப்பு – 50 கிராம், உப்பு – 

தேவையான அளவு

செய்வது எளிது, தயாராகும் நேரம்: 15 (நிமிடம்), 

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:-- 

1. வெங்காயத்தை 

பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் 

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை

 அரைத்துக்கொள்ளவும் 

3. எம்பிரான் பாஸ்மதி அரிசியைக் கழுவி 15

 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது

 நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப்

 போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய

 வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் 

வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு

 விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள

 மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது

 நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், 

உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட்

 போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர்

 வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு 

அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக 

வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு

 ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க

 விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து 

வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி

 சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து
 பிரியாணி 

மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு 

லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து 

இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும்

 முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி

 பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து 

வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.

எம்பிரான் பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, 

வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி

 மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக