சென்னா மசாலா !!
என்னென்ன தேவை?
வெள்ளைக் கொண்டைக்கடலை - 200 கிராம்,
கடலைப் பருப்பு 50 கிராம்,
டீ பேக் - 2,
மஞ்சள் தூள் - சிறிது,
வறுத்தரைத்த சீரகத் தூள் - சிறிது,
பொடித்த வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள்- 1டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 2,
பச்சை மிளகாய்- 4,
இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
தக்காளி - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிது,
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
உலர்ந்த கசூரி மேத்தி இலைகள்- 1 டீஸ்பூன்.
கடலைப் பருப்பு 50 கிராம்,
டீ பேக் - 2,
மஞ்சள் தூள் - சிறிது,
வறுத்தரைத்த சீரகத் தூள் - சிறிது,
பொடித்த வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள்- 1டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 2,
பச்சை மிளகாய்- 4,
இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
தக்காளி - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிது,
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
உலர்ந்த கசூரி மேத்தி இலைகள்- 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, அடுத்த நாள் கடலைப் பருப்புடன் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் டீ பேக் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் (டீ பேக்-ஐ எடுத்து விடவும்) பின் ஒரு குக்கர் பேனில் எண்ணெயை காய வைத்து சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி பொன்னிறமானதும், தக்காளி, மசாலா தூள்கள் யாவற்றையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் சேர்க்கவும், பின், தண்ணீருடன் வெந்த கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு சேர்த்து சிறிது வதக்கி, கசூரி மேத்தி சேர்த்து கடலையுடன் மசித்து வேகவிடவும். நல்ல மசாலா பதம் வந்ததும், கரம் மசாலா சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு, ஸ்லைஸ் செய்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கொண்டு அலங்கரிக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக