ஞாயிறு, 24 மே, 2015

மொஹல் சிக்கன் கிரேவி

மொஹல் சிக்கன் கிரேவி க்கான பட முடிவு



மொஹல்  சிக்கன் கிரேவி

என்னென்ன தேவை?

சிக்கன் - அரைக் கிலோ


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

வர மிளகாய் - 8

மல்லி - 4 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - 3 இன்ச் அளவு

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3

எப்படி செய்வது?

சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

 பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு

 சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி 

மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து 

அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 

தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர 

மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, 

சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு 

வறுக்கவும்.

இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு 

எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் 

ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய 

வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். 

பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை 

ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த 

சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு 

கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் 

பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான மொஹல்  சிக்கன் கிரேவி ரெடி.

1 கருத்து:

  1. மிகத் தெளிவாக எழுதுகிறீர்கள். படத்தைப் பார்க்கும்போதே நாவில் எச்சி ஊறுகிறது. நான் மிக நன்றாகவும் புதுப்புது விதங்களிலும் சமைப்பேன். நீங்கள் என்னைவிட அற்புதமாகச் சமைக்கும் ஆற்றல் உடையவர்கள் என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு