வெள்ளி, 10 அக்டோபர், 2014

அரிசி

அரிசி நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று, ஆனால் இதன் பலன்கள் தெரியாமலேயே பலர் சமீபகாலமாக அரிசியை தவிர்த்து கோதுமைக்கு மாறி வருகின்றனர்.
இதனால் எடை குறையும் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த கருத்து தவறு.
எனவே இப்போது அரிசியின் வகைகளும், அதன் நன்மைகளையும் பற்றி நாம் பார்ப்போம்.
* கருங்குறுவை என்ற கறுப்பு நிற அரிசி, செங்குறுவை என்ற சிகப்பு நிற அரிசிலும் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருப்பதால் அவை உயிரணுக்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கும்.
* அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லாவற்றிலும் நல்ல மருத்துவ குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன.
* பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* மணிச்சம்பா அரிசியை உட்கொள்வதன் மூலம் ரத்தச் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
* மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம். இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
* விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க(கெட்ட நீரை போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன.
* வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் பச்சரிசிச் சாதம் சாப்பிடக்கூடாது மற்றும் நன்கு ஜீரணமாக புளுங்கல் அரிசியை சாப்பிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக