புதன், 31 டிசம்பர், 2014

மருத்துவ குண பாத்திரங்கள்


மருத்துவ குணத்தை அளிக்கும் சமையல் பாத்திரங்கள்..!
நேற்றைய பதிவில் உணவை நஞ்சாக மாற்றும் சமையல் பாத்திரங்கள்-என்ற தலைப்பில் வேளியிட பட்ட பதிவில் கருத்துக்கள் அனைத்தும் சமையலுக்கு ஏற்ற பாத்திரங்கள் எவை என அனைவருடைய கேள்வியாக இருந்தது..இந்த பதிவு அதை சரி செய்யும் என நம்புகிறேன்.!
மண் பாத்திரம்

மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக ஒரே சீராகப் பரவுகிறது. மேலும் மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும் காற்றும் உணவில் ஊடுருவி சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால் அதில் சமைகும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன் படுத்தத் தேவையில்லை. உணவில் உள்ள அமிலத்தனமையைச் சமப்படுத்தும் உப்பு புளிப்பு சுவையுள்ள உணவுகளை சமைக்கும்போது தீங்கான விளைவுகல் எதையும் ஏற்படுத்தாது. மண் பாத்திரங்களை அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
இரும்புப் பாத்திரம்
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு சமையலுக்கு ஏற்றது. இதில் சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு நீண்ட நேரம் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும். கொஞ்சம் இரும்பு சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும். ஆனால் துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு துவர்ப்பு சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன் சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புக்கள் அதிகம் இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக்கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.
வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால் உடல் சோர்வு நீங்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்தப்பொருட்கல் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது. ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாக கழுவி வெய்யிலில் காய வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உண்வின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால் தான் வெண்கலப்ப்பானையில் வைத்த பொங்கல் சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.
செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்கு பித்த நோய் கண் நோய் சூதக நோய் சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும்.

நஞ்சாக மாறும் பாத்திரங்கள்


நஞ்சாக மாற்றும் சமையல் பாத்திரங்கள்---ஒரு எச்சரிக்கை...!
ஈயப் பாத்திரம்
ஈயம் நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்கு பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாக பயன்படுத்தி வந்த ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான் ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்கு காரணம்.
பீங்கான் பாத்திரம்
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும் பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். காரணம் மலிவு விலை பீங்கான் அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்ச கொதி நிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது.
அலுமினிய பாத்திரம்
ஒவ்வொரு முறையும் அலுமினியம் பாத்திரத்தைக் கழுவும்போது அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது. இந்தக் கலவை உணவில் கலந்து உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூராங்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா காச நோய் போன்ற சுவாசக் கோளாறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக இருப்பதால் அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து உடலுக்குள் எளிதாக சென்று தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடுவது நல்லது.
நான்ஸ்டிக் பாத்திரம்
சமைக்க எளிமையானதாக இருந்தாலும் இதை சூடுபடுத்தும்போது வெளிவரும் PERFLUORINATED COMPOUNDS என்னும் நச்சுப்பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதை தவிர்க்க முடியாது என்பவர்கள் அதனை மிதமான சூட்டில் வைத்து சமைப்பது நல்லது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அமைதி தரும் உணவுகள்



மனஅமைதி தரும் உணவுகள்

ஃபின்லாந்தில் உள்ள டாம்ப்பெரி பல்கலைக்கழகம் உடல்வலிகளையும் மனக்கவலையுடன் சேர்த்து அகற்றும் அபூர்வ உணவுகள் என இந்த உணவுகளைக் குறிக்கிறது.

அந்த உன்னத உணவுகள்:-

1. கம்பு
2. கேழ்வரகு
3. பால் அல்லது தயிர்
4. வள்ளிக்கிழங்கு
5. முந்திரி
நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும்.
ஆகவே, கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். சீசனின் போது வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம். பகல் உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும் தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம்.
மூளையில் செரோட்டனின் போதுமான அளவு இருக்கும் போது "கவலைப்படாதே", எல்லாம் நல்லபடியாக முடியும்", திடீரென்று கோபபப்பட்டு யாருடனும் வலுச்சண்டைக்கு போகாதே", மனஇறுக்கம் இல்லாமல் வாழ்" போன்ற சிந்தனைகளை எழுப்பி நம்மை கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதாம். அதே நேரத்தில் செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருந்தவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது நல்லது. இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள். இரவில் நன்கு தூங்குவார்கள். இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தையும் பெறுவார்கள்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

திருவாதிரை களி


திருவாதிரை களி
ஆருத்ரா தரிசனம் அன்று எம்பெருமானுக்கு படைக்க உள்ள களி செய்யும் முறை ( வலைத்தளத்தில் கிடைத்த பதிவு )
களி செய்ய ஆரம்பிக்குமுன் எல்லாப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வேலை கடகடவென முடிந்துவிடும்.
தேவையானவை:
பச்சரிசி_ஒரு கப்
பச்சைப்பருப்பு_1/4 கப்
கடலைப்பருப்பு_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
வெல்லம்_ஒன்னேகால் கப்
தேங்காய்ப்பூ_ஒன்றிரண்டு டீஸ்பூன்
உப்பு_துளிக்கும் குறைவாக‌
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
செய்முறை:
பச்சரிசி,பச்சைப்பருப்பு,கடலைப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு ஏலக்காயையும் சேர்த்து ரவை பதத்திற்குப் பொடித்துக்கொள்ளவும்.துளி உப்பையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.
களி கிண்டப்போகும் பாத்திரத்தில் 4 கப்புகள் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் தூசு,மண் இல்லாமல் வடித்துவிட்டு மீண்டும் அடுப்பிலேற்றி தீயை மிதாமாக வைத்து லேஸான பாகுப்பதத்திற்கு கொதிக்க விடவும்.
இதற்குள் களிக்கானத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது தேங்காய்ப் பூவைப்போட்டு,பொடித்து வைத்துள்ள ரவையையும் சிறிதுசிறிதாகக் கொட்டிக்கொண்டே கட்டி விடாமல் கிளறவும்.கட்டிகளில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
ரவையைக் கொட்டிக் கிளறும்போதே வெந்துவிடும்.தீயை மிதமாக்கிக்கொண்டு,வெல்ல நீரை ஊற்றிக் கிண்டிவிட்டு,எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும்.
ஒரு கரண்டியில் நெய்விட்டு முந்திரியை வறுத்துக்கொட்டவும்.
மீண்டும் ஒன்றிரண்டு முறை கிளறிக்கொடுக்க பொலபொலவென்று உதிர்ந்துகொள்ளும்.இப்போது சுவையான திருவாதிரைக் களி தயார்.

வியாழன், 25 டிசம்பர், 2014

புதினா குழம்பு



புதினா குழம்பு !!!
கார குழம்பு தெரியும், வற்றல் குழம்பு தெரியும், இது என்ன புதினா குழம்பு....வாருங்கள் தெரிந்துக்கொள்வோம் !!!
என்னென்ன தேவை?

புதினா - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறு துண்டு
திக்கான தேங்காய்ப்பால் - 1 கப்
கடுகு - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
புதினா இலைகளைச் சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். பிறகு புதினா, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு மல்லித்துாள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை நன்றாகக் கொதித்ததும் புளியைக் கரைத்துச் சேர்க்கவும். சுண்டி வரும்போது வெல்லத்தைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, திக்கான தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். இது பரோட்டா, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சாப்பாட்டுக்கும் ஏற்றது.

புதன், 24 டிசம்பர், 2014

காய்கறி வாங்குவது எப்படி?


காய்கறி வாங்குவது எப்படி?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்.
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

ஐஸ்வர்ய கோலம்.





ஐஸ்வர்ய கோலம்.............

அட்சய திருதியை தினத்தன்று ஐஸ்வர்ய கோலம் போட்டு பூஜை செய்வது நல்லது. இந்த கோல பூஜை மூலம் அனைத்து செல்வங்களும் உள்ள உன்னதமான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். ஐஸ்வர்ய கோலம் சக்தியின் ரூபத்தை காட்டுவதோடு மட்டுமின்றி, சிவனின் கோலத்தையும் (காட்சி) நமக்குக் காட்டுகின்ற கோலமாகும். 
வீட்டில் செல்வம் பெருக ஐஸ்வர்ய கோலம்
ஐஸ்வர்ய கோலத்தின் நடுவில் உள்ள நாற்கோணங்களைப் பாருங்கள். மேலும் கீழும் சிவசக்தியாக ஈஸ்வரர் நின்றிருக்க, இருபுறமும் மற்ற இரு மூர்த்திகளான பிரும்பாவும், விஷ்ணுவும் தத்தம் பத்தினிகளுடன் நிற்பதைக் காட்டும் பகுதி அது.

அந்தக் கோலத்தில் உள்ள ஈஸ்வரனின் இதயத்தில், சக்தியின் ஒரு அம்சமான லட்சுமி தேவி அமர்ந்திருந்து பக்தர்களுக்கு ஐஸ்வர்யத்தைத் தருவது என்ற ஐதீகத்தை இந்த கோலம் காட்டுகிறது. பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை மாட்டி வைத்து 45 நாட்கள் அதன் முன் நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒருநாள் கூட இடைவிடாமல் இந்த பூஜையை செய்து முடித்தால், நீங்கள் நினைத்தது நடக்கும். தேய்பிறை போல நம்முடைய பிரச்சினைகள் மறையத் தொடங்கும். பவுர்ணமி அன்று பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து வைத்து விட வேண்டும்.

பிரார்த்தனை எழுதி வைக்கப்பட்டுள்ள காகிதத்தினால் ஐஸ்வர்ய கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, சுவாமி பீடத்தில் ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி, ஐஸ்வர்ய கோலத்திற்கு முன் அதைக்காட்டி விட்டு சாமி அறையில் வைத்து விட வேண்டும்.

பிறகு நமக்குத் தெரிந்த லட்சுமி துதியைச் சொல்லி, நம்மால் இயன்ற ஒரு சிறிய நைவேத்தயத்தைச் செய்யலாம். தொடர்ந்து 45 நாட்கள் இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள காகிதத்தால் ஐஸ்வரியக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு நெய் விளக்கை ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்கு முன் காட்டி விட்டு வைத்து விட வேண்டும்.

முடியாத தினங்களில் வேண்டுதல் எழுதி வைக்கப்பட்டுள்ள காகிதம் மாற்றப்படுவதில்லை என்பதால், வீட்டில் உள்ள வேறு எவர் வேண்டுமானாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் 45 நாட்கள் தொடர்ந்து அதைச் செய்ய வேண்டும். அட்சய திருதியை அன்று இப்பூஜையைச் செய்வது மிகவும் விசேஷம். அன்று மட்டுமோ அல்லது அன்றிருந்து 45 நாட்களுமோ செய்யலாம். இப்படிச் செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும். மகிழ்ச்சி தாண்டவமாடும்.

சிக்கன் பிரியாணி




சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? 

தேவையான பொருள்கள்
சிக்கன் -- 1 கிலோ
பாஸ்மதி ரைஸ் -- 1 கிலோ
வெங்காயம் -- 6 எண்ணிக்கை
தக்காளி -- 4 எண்ணிக்கை
இஞ்சி&பூண்டு விழுது -- 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை --2 அல்லது 3
(பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் ,
அன்னாசி பூ ,கடல் பசி)பொடி செய்தது -- 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -- 8 எண்ணிக்கை
புதினா தழை -- சின்ன கட்டு 1
கொத்தமல்லி தழை -- சின்ன கட்டு 1
மஞ்சள் -- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -- 2 தேக்கரண்டி --தேவைக்கேற்ப
உப்பு -- தேவைக்கேற்ப
எண்ணெய் -- சிறிது
நெய் -- 2 தேக்கரண்டி
எலுமிச்சை -- 1/2 பழம்
தேங்காய் பால் -- 1 டம்ளர்
தண்ணீர் -- 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர்
செய் முறை :
அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும் .சிக்கெனை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு கழுவிக்கொள்ளவும் . இந்த சிக்கெனில் ஒரு தேக்கரண்டி இஞ்சி &பூண்டு விழுது ,கொஞ்சம் உப்பு , மஞ்சள் பொடி சிறிது ,மிளகாய் பொடி போட்டு பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும் .பின் இதை பத்து நிமிடம் அடுப்பில் (சிம்) வேகவைக்கவும்.தண்ணீர் விடக்கூடாது.அரை வேக்காடு வெந்தால் போதும்.இப்படி செய்தால் சிக்கெனிலும் மசாலா சேர்ந்துவிடும் .தண்ணீர் விடக்கூடாது அது முக்கியம்.சிக்கன் விடும் தண்ணீரே போதும்.....
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். தக்காளியை பொடிதாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை லேசாக கீறி கொள்ளவும் . புதினா & கொத்தமல்லியை நன்கு கழுவி அறிந்துகொள்ளவும்.
குக்கர்- அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் , நெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி & பூண்டு விழுது போட்டு மனம் வரும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும்.வதங்கியதும் பச்சை மிளகாய் ,புதினா & கொத்தமல்லி தழைகளை போடவும். இதோடு பொடி பண்ணி வைத்துள்ள பட்டை ,கிராம்பு.....பொடிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.(இதற்கு கரம்மசாலா போடாமல் இப்படி பொடி பண்ணி போட்டால் தான் நன்றாக இருக்கும்).......வதங்கியதும் உப்பு ,மஞ்சள் தூள், மிளகாய் பொடி போட்டு வதக்கி அளவு தண்ணீர் விடவும் .தண்ணீரில் ஒரு டம்ளர் குறைத்து அதற்கு பதில் ஒரு டம்ளர் தேங்காய் பால் விடவும். இது நன்கு கொதிக்கும் போது வேகவைத்துள்ள சிக்கன் , ஊறவைத்துள்ள (ஊற வைத்துள்ள தண்ணீரை வடித்து விடவும் )அரிசியை போடவும். பின் நன்கு கிளறி உப்பு , காரம் பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கிளறி குக்கர் மூடி விடவும் . ஆவி வந்ததும் வெயிட் போட்டு.........அடுப்பை சிம் இல் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும். ஆவி போனதும் மூடியை திறந்து கிளறி விட்டு எலுமிச்சையை பிழிந்து விட்டு திரும்பவும் மூடி வைக்கவும் . பின் சிறிது நேரத்தில் பரிமாறலாம் . (உதிரியாக வேண்டுமானால் சிறிது தண்ணீரை குறைத்துக்கொள்ளலாம் . )
சிச்கெனுக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் பிரியாணி இது போல் செய்யலாம்.மட்டனையும் சிக்கெனை போல் அரை வேக்காடு வேக வைக்கவும்...சுவையான பிரியாணி ரெடி. செய்து மகிழுங்கள்.

மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள்

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை,
குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச்
செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள்
என்று எண்ணாமல் தனக்குக்
கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன்
குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும்
காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல்
அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக
கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல
வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்
சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத்
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள்
கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்

உணவு உட்கொள்ளும் 12 வகைகள்







1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

தம் பிரியாணி




தம் பிரியாணி சமைப்பது எப்படி ?

சமையல் குறிப்பு:
பிரியாணி செய்யும் முறை:
தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி-1/4 கிலோ; மாமிசம்-1/4 கிலோ; பெரிய வெங்காயம்-150 கிராம்; தக்காளி-150 கிராம்; எண்ணெய்-100 கிராம்; நெய்-150 கிராம்; தேங்காய்-பெரியது 1; சிவப்பு மிளகாய்த் தூள்; பச்சை மிளகாய்- 10 ; இஞ்சி-15-கிராம்; பூண்டு-பெரியது 1; சின்ன வெங்காயம்-25 கிராம்; பட்டை, கிராம்பு, சோம்பு, லவங்கம் -தாளிக்கத் தேவையான அளவு; மஞ்சள் தூள்-கொஞ்சம்; உப்பு- தேவையான அளவு; புதினா, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை; அலங்கரிக்க கொஞ்சம் முந்திரிப் பருப்பு.
செய்முறை:
முதலில் அரிசியை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். மாமிசத்தை லேசாக உப்பும் கொஞ்சம் மிளகாய்த் தூளும் போட்டு அரை வேக்காடாக வேக வைத்துக்கொள்ளவும் . தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை ஏற்றி அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, லவங்கம்,சோம்பு போட்டு தாளித்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காய விழுதை அத்துடன் சேர்த்து லேசாக வதக்கியபின், அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அரிசியின் அளவைப்போல் இரு மடங்கு தண்ணீர் தேவைப்படும். எனவே தேங்காய்ப்பால், மற்றும் மாமிசம் வேக வைத்த தண்ணீருடன் எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து குக்கர் பாத்திரத்தில் ஊற்றவேண்டும். எல்லாம் சேர்த்து மொத்தம் இரு மடங்கு தண்ணீர்தான் இருக்கவேண்டும் அதில் மாமிசத்தையும் ஊற வைத்த அரிசியையும் நீரை வடித்துவிட்டுப் போடவும் . அத்துடன் மீதமுள்ள மிளகாய்த்தூள் ,மஞ்சள் தூள் போட வேண்டும். மாமிசத்துடன் சிறிது உப்பு சேர்த்திருப்பதால், உப்பை அளவு பார்த்து போடவேண்டும். இப்போது குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும். பிறகு ஸ்டவ்வை அணைத்துவிட்டு 10 நிமிடம் கழித்து திறந்து அதில் புதினா, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை போட்டு நெய்யைச் சூடு பண்ணி அதில் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும். கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போட்டுக்கொள்ள்லாம். சூடான பிரியாணி தயார். பிடித்தமான சைட் டிஷ்ஷுடன் பறிமாறலாம். குருமா, தயிர்ப் பச்சடி, மற்றும் கத்தரிக்காய்க் கறி முதலியவை சூட்டாகும் .சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். இது குக்கரில் பிரியாணி செய்யும் முறை . தம் பிரியாணியும் செய்யலாம்.
தம் பிரியாணி செய்யும் முறை:
இந்த முறையில் மேற்சொன்னபடி பொருட்களைக் கலக்க வேண்டும். ஆனால், விறகு அடுப்பு தேவைப்படும். அடுப்பை எரியவிட்டு, அதில் குக்கருக்குப் பதில் பிரியாணி செய்யும் தாவாவை வைக்க வேண்டும். அனைத்துப் பொருட்களையும் கலந்தபின் 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து வருகையில் ஒரு தட்டு போட்டு பிரியாணி வேகும் பாத்திரத்தை மூடி அந்த தட்டில் அடுப்பை அணைத்துவிட்டு அந்த தணலை அள்ளிப்போடவேண்டும். கீழே தீ இருக்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் மேலிருத்து உஷ்ணம் கிடைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால், பிரியாணி உதிரியாக வந்திருக்கும். அதில் கொத்தமல்லித் தழை, புதினா, கருவேப்பிலை போட்டு சூடு பண்ணிய நெய் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும். கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்த் சேர்த்துக்கொள்ளலாம். தம் பிரியாணியின் சுவையும் அலாதியானது.

வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாதா?

வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாதா?
வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில் இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும் தந்திரமா?
இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

திங்கள், 22 டிசம்பர், 2014

tasty idly

இட்லி:
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர்உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லிதயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச ழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு,மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த
நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!
சோறு:
தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரிமசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையாஇருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!
புரோட்டா:
பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல
கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி
நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!
சால்னா :
சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற
ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க.
'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப்
போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம்மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து
கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!
ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில
தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.
எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க . உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் ழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க. சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்!
(படித்தது )

பழைய சாதத்தின் மகத்துவம்




பழைய சாதத்தின் மகத்துவம்  மருத்துவ குணகங்கள்:-

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். 

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள் இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம்.

சுரைக்காய் மோர் கூட்டு



சுரைக்காய் மோர் கூட்டு
தேவையானப்பொருட்கள்:

சுரைக்காய் - 1

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

வெந்தயம் - 5 அல்லது 6

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சுரைக்காயின் தோலை சீவிவிட்டு, 

உள்ளிருக்கும் 

விதை மற்றும் வெள்ளைப் பகுதியை நீக்கி 

விட்டு, 

சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் 

ஆகியவற்றை 

சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் 

கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் சிறிது 

நீரைச் 

சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் 

போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் 

மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக 

விடவும். காய் வெந்ததும் அதில் அரைத்து 

வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு 

கலந்து 

ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும். பின்னர் 

அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் 

சேர்த்துக் 

கிளறி விட்டு, உடனே அடுப்பை அணைத்து 

விடவும். நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.

ஒரு வாணலியில் அல்லது தாளிக்கும் 

கரண்டியில் 

எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். 

கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் 

பெருங்காயம், 

காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை 

ஆகியவற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, 


இந்த 


தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும்.
இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 

அல்லது மற்ற சாத வகைகளுடன் தொட்டுக் 

கொள்ளவும் செய்யலாம்