cooking tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cooking tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 டிசம்பர், 2014

புதினா குழம்பு



புதினா குழம்பு !!!
கார குழம்பு தெரியும், வற்றல் குழம்பு தெரியும், இது என்ன புதினா குழம்பு....வாருங்கள் தெரிந்துக்கொள்வோம் !!!
என்னென்ன தேவை?

புதினா - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறு துண்டு
திக்கான தேங்காய்ப்பால் - 1 கப்
கடுகு - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
புதினா இலைகளைச் சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். பிறகு புதினா, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு மல்லித்துாள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை நன்றாகக் கொதித்ததும் புளியைக் கரைத்துச் சேர்க்கவும். சுண்டி வரும்போது வெல்லத்தைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, திக்கான தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். இது பரோட்டா, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சாப்பாட்டுக்கும் ஏற்றது.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

சிக்கன் பிரியாணி




சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? 

தேவையான பொருள்கள்
சிக்கன் -- 1 கிலோ
பாஸ்மதி ரைஸ் -- 1 கிலோ
வெங்காயம் -- 6 எண்ணிக்கை
தக்காளி -- 4 எண்ணிக்கை
இஞ்சி&பூண்டு விழுது -- 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை --2 அல்லது 3
(பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் ,
அன்னாசி பூ ,கடல் பசி)பொடி செய்தது -- 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -- 8 எண்ணிக்கை
புதினா தழை -- சின்ன கட்டு 1
கொத்தமல்லி தழை -- சின்ன கட்டு 1
மஞ்சள் -- 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -- 2 தேக்கரண்டி --தேவைக்கேற்ப
உப்பு -- தேவைக்கேற்ப
எண்ணெய் -- சிறிது
நெய் -- 2 தேக்கரண்டி
எலுமிச்சை -- 1/2 பழம்
தேங்காய் பால் -- 1 டம்ளர்
தண்ணீர் -- 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர்
செய் முறை :
அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும் .சிக்கெனை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு கழுவிக்கொள்ளவும் . இந்த சிக்கெனில் ஒரு தேக்கரண்டி இஞ்சி &பூண்டு விழுது ,கொஞ்சம் உப்பு , மஞ்சள் பொடி சிறிது ,மிளகாய் பொடி போட்டு பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும் .பின் இதை பத்து நிமிடம் அடுப்பில் (சிம்) வேகவைக்கவும்.தண்ணீர் விடக்கூடாது.அரை வேக்காடு வெந்தால் போதும்.இப்படி செய்தால் சிக்கெனிலும் மசாலா சேர்ந்துவிடும் .தண்ணீர் விடக்கூடாது அது முக்கியம்.சிக்கன் விடும் தண்ணீரே போதும்.....
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். தக்காளியை பொடிதாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை லேசாக கீறி கொள்ளவும் . புதினா & கொத்தமல்லியை நன்கு கழுவி அறிந்துகொள்ளவும்.
குக்கர்- அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் , நெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி & பூண்டு விழுது போட்டு மனம் வரும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி போட்டு வதக்கவும்.வதங்கியதும் பச்சை மிளகாய் ,புதினா & கொத்தமல்லி தழைகளை போடவும். இதோடு பொடி பண்ணி வைத்துள்ள பட்டை ,கிராம்பு.....பொடிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.(இதற்கு கரம்மசாலா போடாமல் இப்படி பொடி பண்ணி போட்டால் தான் நன்றாக இருக்கும்).......வதங்கியதும் உப்பு ,மஞ்சள் தூள், மிளகாய் பொடி போட்டு வதக்கி அளவு தண்ணீர் விடவும் .தண்ணீரில் ஒரு டம்ளர் குறைத்து அதற்கு பதில் ஒரு டம்ளர் தேங்காய் பால் விடவும். இது நன்கு கொதிக்கும் போது வேகவைத்துள்ள சிக்கன் , ஊறவைத்துள்ள (ஊற வைத்துள்ள தண்ணீரை வடித்து விடவும் )அரிசியை போடவும். பின் நன்கு கிளறி உப்பு , காரம் பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கிளறி குக்கர் மூடி விடவும் . ஆவி வந்ததும் வெயிட் போட்டு.........அடுப்பை சிம் இல் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும். ஆவி போனதும் மூடியை திறந்து கிளறி விட்டு எலுமிச்சையை பிழிந்து விட்டு திரும்பவும் மூடி வைக்கவும் . பின் சிறிது நேரத்தில் பரிமாறலாம் . (உதிரியாக வேண்டுமானால் சிறிது தண்ணீரை குறைத்துக்கொள்ளலாம் . )
சிச்கெனுக்கு பதில் மட்டன் போட்டு மட்டன் பிரியாணி இது போல் செய்யலாம்.மட்டனையும் சிக்கெனை போல் அரை வேக்காடு வேக வைக்கவும்...சுவையான பிரியாணி ரெடி. செய்து மகிழுங்கள்.

உணவு உட்கொள்ளும் 12 வகைகள்







1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

தம் பிரியாணி




தம் பிரியாணி சமைப்பது எப்படி ?

சமையல் குறிப்பு:
பிரியாணி செய்யும் முறை:
தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி-1/4 கிலோ; மாமிசம்-1/4 கிலோ; பெரிய வெங்காயம்-150 கிராம்; தக்காளி-150 கிராம்; எண்ணெய்-100 கிராம்; நெய்-150 கிராம்; தேங்காய்-பெரியது 1; சிவப்பு மிளகாய்த் தூள்; பச்சை மிளகாய்- 10 ; இஞ்சி-15-கிராம்; பூண்டு-பெரியது 1; சின்ன வெங்காயம்-25 கிராம்; பட்டை, கிராம்பு, சோம்பு, லவங்கம் -தாளிக்கத் தேவையான அளவு; மஞ்சள் தூள்-கொஞ்சம்; உப்பு- தேவையான அளவு; புதினா, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை; அலங்கரிக்க கொஞ்சம் முந்திரிப் பருப்பு.
செய்முறை:
முதலில் அரிசியை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். மாமிசத்தை லேசாக உப்பும் கொஞ்சம் மிளகாய்த் தூளும் போட்டு அரை வேக்காடாக வேக வைத்துக்கொள்ளவும் . தேங்காய்ப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை ஏற்றி அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, லவங்கம்,சோம்பு போட்டு தாளித்துக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காய விழுதை அத்துடன் சேர்த்து லேசாக வதக்கியபின், அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அரிசியின் அளவைப்போல் இரு மடங்கு தண்ணீர் தேவைப்படும். எனவே தேங்காய்ப்பால், மற்றும் மாமிசம் வேக வைத்த தண்ணீருடன் எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து குக்கர் பாத்திரத்தில் ஊற்றவேண்டும். எல்லாம் சேர்த்து மொத்தம் இரு மடங்கு தண்ணீர்தான் இருக்கவேண்டும் அதில் மாமிசத்தையும் ஊற வைத்த அரிசியையும் நீரை வடித்துவிட்டுப் போடவும் . அத்துடன் மீதமுள்ள மிளகாய்த்தூள் ,மஞ்சள் தூள் போட வேண்டும். மாமிசத்துடன் சிறிது உப்பு சேர்த்திருப்பதால், உப்பை அளவு பார்த்து போடவேண்டும். இப்போது குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும். பிறகு ஸ்டவ்வை அணைத்துவிட்டு 10 நிமிடம் கழித்து திறந்து அதில் புதினா, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை போட்டு நெய்யைச் சூடு பண்ணி அதில் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும். கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போட்டுக்கொள்ள்லாம். சூடான பிரியாணி தயார். பிடித்தமான சைட் டிஷ்ஷுடன் பறிமாறலாம். குருமா, தயிர்ப் பச்சடி, மற்றும் கத்தரிக்காய்க் கறி முதலியவை சூட்டாகும் .சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். இது குக்கரில் பிரியாணி செய்யும் முறை . தம் பிரியாணியும் செய்யலாம்.
தம் பிரியாணி செய்யும் முறை:
இந்த முறையில் மேற்சொன்னபடி பொருட்களைக் கலக்க வேண்டும். ஆனால், விறகு அடுப்பு தேவைப்படும். அடுப்பை எரியவிட்டு, அதில் குக்கருக்குப் பதில் பிரியாணி செய்யும் தாவாவை வைக்க வேண்டும். அனைத்துப் பொருட்களையும் கலந்தபின் 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து வருகையில் ஒரு தட்டு போட்டு பிரியாணி வேகும் பாத்திரத்தை மூடி அந்த தட்டில் அடுப்பை அணைத்துவிட்டு அந்த தணலை அள்ளிப்போடவேண்டும். கீழே தீ இருக்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் மேலிருத்து உஷ்ணம் கிடைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால், பிரியாணி உதிரியாக வந்திருக்கும். அதில் கொத்தமல்லித் தழை, புதினா, கருவேப்பிலை போட்டு சூடு பண்ணிய நெய் ஊற்றிக் கிளறி இறக்கவேண்டும். கொஞ்சம் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்த் சேர்த்துக்கொள்ளலாம். தம் பிரியாணியின் சுவையும் அலாதியானது.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

இல்லத்தரசிக்கு - யோசனைகள்



இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்...!!

நாம் சமையல் செய்யும் பொழுது நமக்கு 

தெரிந்தவற்றை மட்டும்தான் செய்வோம். 

ஆனால் நமக்கு தெரியாத பல சுலபமான 

வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன. 

அவற்றை நாம் தெரிந்து கொண்டாலே நமது 

வேலை பாதி சுலபமாகிவிடும்.


இதில் உங்களுக்குத் தெரிந்ததும் இருக்கலாம் 

தெரியாததும் இருக்கலாம். தெரிந்ததை விட்டு 

விட்டு தெரியாததை எடுத்துக் கொள்ளவும்.


குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக 

இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி 

அதில் 

போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று 

உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.


பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் 

பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் 

பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.


தேங்காய்த் துருவல் மீதியானால், அதை 

லேசாக 

வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் 

சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.


உளுந்துவடை செய்யும் போது மாவுடன் 

வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து 

கலந்து 

வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் 

மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.


கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற 

இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் 

அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.


ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் 

கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு 

சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.


தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் 

சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் 

போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.


பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், 

எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து 

அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு 

காணாமல் போய்விடும்.


வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் 

போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து 

மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் 

பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக 

இருக்கும்.


சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் 

போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள 

சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.


சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் 

தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், 

பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.


இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் 

மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி 

செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.


தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி 

பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற 

வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி 

செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை 

போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.


மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் 


தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.


பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு 

பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் 

பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் 

இருக்கும்.


வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் 

போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க 

கைகளில் உப்பை தடவிக்கொண்டு 

நறுக்கவேண்டும்.


தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது 

ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் 

தோசை நன்றாக வருவதோடு மொரு 

மொருவென இருக்கும்.


எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத 

வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய 

தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் 

விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் 

உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.


உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை 

வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது 

உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். 

இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல 

பதத்துடன் இருக்கும்.


தக்காளி குருமா செய்யும் போது சிறிது 

வெங்காயத்தை பச்சையாக அறைத்து 

ஊற்றவும், குருமா வாசனையுடன் 

சுவையாகவும் இருக்கும்.


துவரம் பருப்புக்கு பதிலாக 

பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு 

கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி 

செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் 

வாசனையாகவும் இருக்கும்.


நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 

தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல 

வாசனையுடன் இருக்கும்