புதன், 5 ஆகஸ்ட், 2015

சாம்பார் பொடி -




சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் -- 10 கிராம்
கொத்தமல்லி -- 20 கிராம்
வெந்தயம் -- 1 டீஸ்பூன்
கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1 துண்டு
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
தேங்காய் எண்ணைய் -- தே.அ
செய்முறை
எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும்.
கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும்.
இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி.
நல்ல ருசியான காரமான சாம்பார் பொடிரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக