புதன், 5 ஆகஸ்ட், 2015

சுண்டைக்காய்த் துவையல்




sundaikai thuvayal
சுண்டைக்காய்த் துவையல்
சுண்டைக்காய், குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. வயிற்றில் புழு இருந்தால் சரியாக சாப்பிட முடியாது. புண்ணும் ஏற்படும். இவற்றுக்கெல்லாம் சுண்டைக்காய்த் துவையல் கைகண்ட மருந்து. 
தேவையான பொருட்கள்: 
பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கப் 
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
புளி - கொட்டைப்பாக்கு அளவு 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வறுத்துப் பொடிக்க: 
காய்ந்த மிளகாய் - 2 
பெருங்காயம் - ஒரு சிட்டிகை 
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் 
செய்முறை: 
• கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 
• வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
• அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை வதக்கவும். 
• சுண்டைக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, பொடித்த பொடியைச் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 
• இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக