திங்கள், 10 ஆகஸ்ட், 2015

Vegetable Sevai | வெஜ் சேவை



Vegetable Sevai | வெஜ் சேவை
தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் இடியாப்பம் உதிர்த்தது - 6 - 8
அல்லது இன்ஸ்டண்ட் ரைஸ் சேவை - 2 கப்
கடுகு & உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
கடலை பருப்பு - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் ,மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
இஞ்சித் துருவல் - 1டீஸ்பூன் ( விரும்பினால்)
துருவிய கேரட் - அரை கப், பச்சை பட்டாணி - கால் கப்
அல்லது வேக வைத்த காய்கறி - ஒரு கப்
எலுமிச்சை சாறு - 1 அல்லது 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும்,கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,வற்றல் கருவேப்பிலை,பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.விரும்பினால் இஞ்சி துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
காய்கறிகள் சேர்க்கவும்.
மஞ்சள் தூள் சேர்க்கவும், நன்கு பிரட்டி விடவும்.சிறிது வதங்கட்டும்.சிறிது தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
உதிர்த்து வைத்த இடியாப்பம் சேர்க்கவும்.
ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விடவும்.நன்கு பிரட்டவும்.
தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுவையான வெஜிடபிள் லெமன் சேவை ரெடி. காலை மாலை இரவு நேர டிஃபனுக்கு ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக