நமது உணவில் இன்று அதிகம் இடம் பிடிக்கும் "புளி',இந்தியாவிற்கு,குறிப்பாக தமிழகத்திற்கு கி.பி.14-ம் நூற்றாண்டில் வந்தடைந்தது.புளியின் இயல்பான வாழிடம் ஆப்பிரிக்கா
ஆலமரம் நமது தமிழகத்தைச் சார்ந்ததல்ல.வடநாட்டிலிருந்து அசோகர் காலத்திலோ, அதற்குச் சற்று முன்போ புத்த மதத்தோடு தமிழகத்தை அடைந்திருக்க வேண்டும். தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழகத்தை வந்தடைந்த அயல் தாவரமாக ஆலமரம் உள்ளது.
வடநாட்டில் இருந்து தமிழகத்தை வந்தடைந்த மற்றொரு தாவரம் "பவழ மல்லிகை'.பக்தி இயக்க காலமான கி.பி.7ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகம் வந்து சேர்ந்தது இது.
இன்று தமிழகத்தில் பணப்பயிராக வளர்க்கப்படும் தென்னை,பிலிப்பைன்ஸ்,பசிபிக் தீவுகளில் தோன்றி இலங்கை வழியாக கேரளாவையும், தமிழகத்தையும் வந்தடைந்திருக்க வேண்டும் என்ற கூற்றையும் பேராசிரியர் முன் வைக்கிறார்.
கி.பி.7-ம் நூற்றாண்டு வரை கோயில்களுக்கு தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புகளும்,கி.பி.10-ம் நூற்றாண்டு வரை தேங்காய் கடவுளுக்கு படைக்கப்பட்டதாக எந்த இலக்கிய குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
கி.பி.7-ம் நூற்றாண்டு வரை கோயில்களுக்கு தேங்காய் உடைத்தல் பற்றிய குறிப்புகளும்,கி.பி.10-ம் நூற்றாண்டு வரை தேங்காய் கடவுளுக்கு படைக்கப்பட்டதாக எந்த இலக்கிய குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இஞ்சியும், மஞ்சளும் கூட தமிழக தாவரமல்ல. வட இந்தியாவில் இருந்து சங்க காலத்தின் ஆரம்பத்திலோ அதற்கு முன்போ இஞ்சியும்,சீனாவில் இருந்து மஞ்சளும் தமிழகம் வந்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
செவ்வந்தி, கேழ்வரகு, ஆமணக்கு, இன்று நம்முடைய உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கடலைப் பருப்பு போன்றவைகளும் தமிழகத்திற்கு வந்த அயல் தாவரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
16-ம் நூற்றாண்டில் பெரு நாட்டிலிருந்து ஸ்பெயின் வழியாக இந்தியாவை வந்தடைந்தது தான், இன்று நாம் சுவைத்து மகிழும் கொய்யாப்பழம். 16-17-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் களால் இந்தியாவில் நுழைந்த மற்றொரு முக்கிய பயிர்த் தாவரம் உருளைக்கிழங்கு ஆகும். வேர்க்கடலையும் மத்திய அமெரிக்கப் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு கி.பி.1825முதல் 1850-ம் ஆண்டுக்குள் வந்தடைந்தது.
இந்த வகையில் தக்காளியும் இந்தியாவில் நுழைந்த ஒரு பயிர்த் தாவரமாகும். காப்பியும், தேயிலையும் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்களால் நம் நாட்டில் நுழைந்தது நாமறிந்ததே.
பாதாம் பருப்பும், மரவள்ளிக் கிழங்கும், கிராம்பும் இந்தியாவில் நுழைக்கப்பட்ட தாவரங்கள் தான். கற்பூரம் சீனாவிற்கும், சப்பானின் ஒரு சில பகுதிகளுக்கும் இயல்பான தாவரமாகும். 20-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் கேரளா மற்றும் நீலகிரியின் ஒரு சில பகுதிகளிலும் இது நுழைக்கப்பட்டது.குங்குமப்பூ காஷ்மீரப் பகுதியில் இருந்து கி.பி.10-ம் நூற்றாண்டு வாக்கிலும்,வெங்காயம் பெர்சியா மற்றும் ஆப்கானிஸ் தானில் இருந்தும், பூண்டு சுங்காணி பாலைவனத்திலிருந்தும்,சேனைக்கிழங்கு சப்பானியப் பகுதியிலிருந்தும், முள்ளங்கி மற்றும் ஆரஞ்சு சீனாவிலிருந்தும், முட்டைக்கோஸ், காலிபிளவர், டர்னிப், காரட், சிக்கரி போன்றவை ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,பீட்ரூட் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்தும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு தென்அமெரிக்கா விலிருந்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் கடந்த மூன்று நூற்றாண்டு களுக்குள் தான் நுழைந்தன
அவரை (மொச்சை), உழுந்து (உளுந்து), எலுமிச்சை, நெல், கரும்பு, மா, பலா, மாதுளை, முருங்கை,வாழை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இயல்வகை தாவரங்களைப் பற்றிய குறிப்புகளை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.
அவரை (மொச்சை), உழுந்து (உளுந்து), எலுமிச்சை, நெல், கரும்பு, மா, பலா, மாதுளை, முருங்கை,வாழை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இயல்வகை தாவரங்களைப் பற்றிய குறிப்புகளை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது.
பண்டைய தமிழ்ச் சமுதாயத்திலும்,பண்பாட்டிலும் "சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல' என்ற கருத்து வேரூன்றி இருந்தது.கி.பி.15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, விஜய நகர மன்னர்களின் காலம் தொடங்கி,சத்திரங்களில் சோறு விற்கப்பட்டதற்கான ஆதாரங்களை கல்வெட்டுக்களின் வழியே அறிய முடிகிறது.
வரலாற்றுக்கு முந்தையை காலத்தில் தமிழகத்தில் மதங்கள் இல்லை.தாவரங்கள் பரிசுத்தமானவை,கடவுள் தன்மை பெற்றவை என்பது போன்ற தங்கள் கருத்துக்களை ஆரியர்கள் தமிழக ஆன்மீகக் கருத்துக்களில் கலந்தனர். இது "பெரு மரபு சார்ந்த வழிபாடாக' மாறியது.
கோயில்களில் காணப்படும் தாவரங்கள் மட்டுமல்லாது,தாவரங்கள் சூழ்ந்த காடுகளிலும் கோயில்கள் அமைக்கப்பட்டன.அது போல்,இந்தியா முழுவதும் ஏறத்தாழ 50,000-மும், தமிழகத்தில் மட்டும் 448 கோயில் காடுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நெடு மூக்கன், மூக்கன் சம்பா, மூக்கன் நெல், ஆனைக் கொம்பு சம்பா, கார் நெல் என 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்கான தொழில் நுட்பங்களை அறிந்து, பயன்படுத்தியதை சங்க நூல்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.
இன்று உழைப்பின் கூலிக்கு ஈடாக "சம்பளம்' பெறப்படுகிறது. செய்த வேலைக்கு ஈடாகச் சம்பாநெல்லும்,அளத்தில் விளைந்த உப்பும் கொடுத்த வழக்கத்தினால் தான் "சம்பளம்' (சம்பா + அளம்) என்ற சொல் பிறந்தது. தமிழ் மொழியின் வளமையும், தமிழர்களின் கூர்ந்தாய்வு செய்யும் பண்பும் இதன் மூலம் நன்கு விளங்குகிறது.
பண்டைய காலத்தில்,தமிழர்கள் பனை மரங்களை விரும்பி வளர்த்தனர் என்பதை சங்க நூல் (புறநானூறு)மூலம் அறியும் போது,இன்று பணப்பயிர் மீதிருக்கும் மோகம் வருத்தத்தையே அளிக்கிறது.
தாவரங்களுக்கு ஊறுவிளைவிப்ப வர்களுக்கு அரசு தண்டனை கொடுத்த கல்வெட்டு குறிப்புகள், செய்திகள், தாவரப் பாதுகாப்பில் அரசர்கள் எவ்வளவு முனைப்போடு இருந்தனர் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
தாவரங்களின் பாதுகாப்பிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நீருக்கும் தமிழர்கள் அளித்திருந்தனர்.கீழமை பாசனதாரர்களின் "முன்னுரிமை'என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது.
அதற்கு ஆதாரமாக, தொண்டை மண்டலத்து பகுதியில், விதியை மீறிய அரசு அதிகாரியின் செயலை, அரசருக்கு தெரியப்படுத்தி விட்டு, ஊர் மக்களே தடுத்து நிறுத்தினர். (கோமதி நாயகம், 2010) இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்னும் அளவிற்கு அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன.
இந்த பிரியாணியையும் "ஊன் சோறு'என்ற பெயரில் பண்டைய காலத்தில் தமிழர்கள் உணவாகக் கொண்டனர்.
இன்றைய தமிழ்நாட்டின் உணவில் முக்கிய இடம்பிடித்திருக்கும் இட்லி,15ம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் உணவு பழக்கத்தில் இல்லை. இந்தோனேசியா நாட்டிலிருந்து அவிக்கும் பாத்திரமும், அதை பயன்படுத்தும் முறையும், அம்மன்னர்களின் இந்திய வருகையின் போது, தமிழகத்தை அடைந்திருக்கலாம். புளித்த உணவையும், குழைத்த உணவையும் அன்றைய தமிழர்கள் விரும்பி உண்டனர். கள்ளும் தமிழர்கள் விரும்பிக் குடித்த பானம். புளித்த மோர், நாள்பட்ட தேன் போன்றவற்றையும் விரும்பி உண்டனர்.
.பண்டைய தமிழர்கள் இதிலும் பக்க விளைவு,பாதிப்புகளை ஏற்படுத்தாத நுட்பங்களின் மூலம் சாயத்தை பெற்றனர். தாவரங்களின் இலைகள், வேர், பூ, பட்டை போன்றவற்றின் சாறில் இருந்து வெளிப்படும் நிறங்களை முன்னுணர்ந்து அதற்கேற்றப்படி துணி,பட்டு,பாய்கள்,ஓவியங்களுக்கு நிறமேற்றியிருக்கிறார்கள்.
தாவரங்கள் மற்றும் மற்ற பொருட்களின் வணிகத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். கனி, காய்கள், இலைகள் உள்ளிட்ட தாவரங்களின் பாகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியேயும், தரை மூலமாகவும் பண்டைய தமிழர்கள் வணிகம் செய்து வந்துள்ளனர்.
இதில் எந்த ஒரு கட்டத்திலும் மரங்களோ, காடுகளோ அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் மட்டும் 50%-க்கும் மேற்பட்ட இயற்கை வளங்களை நாம் தான் (இன்றைய தமிழர்கள்) அழித்துள்ளோம்.
தனது 25 ஆண்டு கால உழைப்பில் வரலாற்று ஆவணமாக, "தமிழரும் தாவரமும்' என்ற அறிவியல்பூர்வமான,மிகச் சிறந்த நூலை பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ளார்.
இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்நூல் ஒரு வழி காட்டியாக அமையும். தமிழ் இனம், மொழி, நிலம் காக்க போராடும் அறிஞர்களின் கையில் "தமிழரும் தாவரமும்' நூல் ஒரு அறிவாயுதமாக விளங்கும்.
நூலின் பெயர்
தமிழரும் தாவரமும்
ஆசிரியர்
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
விலை ரூ.200/-
தமிழரும் தாவரமும்
ஆசிரியர்
பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
விலை ரூ.200/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக