ஞாயிறு, 28 ஜூன், 2015

வஞ்சரம் பிரை type 1

வஞ்சர பிரை type 1 க்கான பட முடிவு

வஞ்சரம் பிரை type 1

எப்படி செய்வது ?

வஞ்சர மீன் - 8 துண்டுகள் ,
எலும்பிச்சை சாறு - 2 Table Spoon ,
கறிவேப்பிலை - 5 இலைகள் ,  
வரமிளகாய் - 5 ,
மல்லி - 1 டீஸ்பூன் ,
பச்சை மிளகாய் - 4 ,
கசகசா - 1 ஸ்பூன் ,
ஓமம் - 1 சிட்டிகை ,
பூண்டு - 5 பற்கள் 
இஞ்சி - 1/2 இஞ்ச் ,
சீரகம் - 1 டீஸ்பூன் ,
ரவை - 1 கப் ,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் ,
உப்பு - தேவையான அளவு .


என்னென்ன தேவை ?




மீனை நன்கு 

சுத்தமாக கழுவி , 

அதனை உப்பு 

மற்றும் 

எலுமிச்சை 

சாறு சேர்த்து 

பிரட்டி 10 நிமிடம் 

பிரிட்ஜில் வைக்க 


வேண்டும் . பின்னர் 

வரமிளகாய் , பச்சை மிளகாய் , 

இஞ்சி , பூண்டு , கசகசா , சீரகம் 

,மற்றும் மல்லி ஆகியவற்றை 

தண்ணீர் சேர்த்து கெட்டியாக 

அரைத்துக் கொள்ள வேண்டும் , 

பின்பு அரைத்து வைத்துள்ள 

மசாலாவை பிரிட்ஜில் உள்ள மீனில் 

நன்கு தடவி , மீண்டும் 10 நிமிடம் 

ஊற வைக்க வேண்டும் , 


பிறகு ஒரு வாணலியை அடுப்பில் 

வைத்து அதில் எண்ணெய் 

காய்ந்ததும் , ஓமம் மற்றும் 

கறிவேப்பிலை சேர்த்து , அதில் 

உள்ள பிளவர் எண்ணையில் 

இறங்கும் வரை சிறிது நேரம் 

வதக்கி விட வேண்டும் . பின் ஊற 

வைத்துள்ள மீன் துண்டுகளை 

ஒவ்வொன்றாக எடுத்து ரவையில் 

பிரட்டி எண்ணையில் போட்டு 

முன்னும் பின்னும் பொன்னிறமாக 

பொறித்து எடுத்தல் வஞ்சரம் பிரை 

தயார் !!!!

சனி, 27 ஜூன், 2015

உப்புமா in ராகி

உப்புமா க்கான பட முடிவு



என்னென்ன தேவை?

ராகி மாவு - 1 கப்


கடுகு - 1/2 டீஸ்பூன்


சீரகம் - 1/2 டீஸ்பூன்


எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்


உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,

 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை


பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),
 

வெங்காயம் - 1 (பொடியாக 

நறுக்கியது), 

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), 


கறிவேப்பிலை - சிறிது, 


கொத்தமல்லி - சிறிது, 


உப்பு - தேவையான அளவு, 


தண்ணீர் - 2 கப், 


எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்.



எப்படிச் செய்வது?



முதலில் ஒரு வாணலியை 

அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் 

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ராகி 

மாவை போட்டு நல்ல மணம் வரும் 

வரை வறுக்க  வேண்டும். பின்னர் 

மற்றொரு வாணலியை அடுப்பில் 

வைத்து, அதில் மீதமுள்ள 

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

கடுகு மற்றும் சீரகத்தை போட்டு 

தாளித்து, பின்  கடலைப் பருப்பு, 

உளுத்தம் பருப்பு சேர்த்து 

பொன்னிறமாக வறுக்க வேண்டும். 


பின்பு அதில் கறிவேப்பிலை, 

வெங்காயத்தைப் போட்டு 

பொன்னிறமாக வதக்கி,  

தக்காளியை போட்டு, சிறிது உப்பு 

தூவி நன்கு மென்மையாக வதக்க 

வேண்டும். பிறகு அதில் தண்ணீர் 

ஊற்றி, மெதுவாக ராகி மாவை 

சேர்த்து தொடர்ந்து  கிளறி விட்டு, 

மூடி வைத்து 5 நிமிடம் குறைவான 

தீயில் தண்ணீர் வற்றும் வரை 

கொதிக்க விட வேண்டும். 

தண்ணீரானது முற்றிலும் 

வற்றியதும், அதனை  இறக்கி, 

எலுமிச்சை சாறு மற்றும் 

கொத்தமல்லியைத் தூவி பிரட்டி 

இறக்கினால்  உப்புமா in ராகி ரெடி!!!

சனி, 13 ஜூன், 2015

மீன் குழம்பு

என்னென்ன தேவை?
மீன் குழம்பு க்கான பட முடிவு


மீன் - 1/2 கிலோ,

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது),


பூண்டு - 100 கிராம் (நறுக்கியது),


தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது),


புளி - 1 நெல்லிக்காய் அளவு,


மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,


மல்லித் தூள் - 2 டீஸ்பூன்,


நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,


கடுகு - 1 டீஸ்பூன்,


வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,


சீரகம் - 1/4 டீஸ்பூன்,


உப்பு - தேவையான அளவு,


கறிவேப்பிலை - சிறிது,


கொத்தமல்லி - சிறிது.



எப்படிச் செய்வது?



முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக 

கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை 2 

கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள 

வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் 

வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க 

வேண்டும். பின் வெங்காயம், பூண்டு மற்றும் 

தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை 

வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், 

மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 

வதக்கி, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட 

வேண்டும். குழம்பானது கொதிக்க 

ஆரம்பித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து 

2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் தீயை 

குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

மீன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் 

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் 

தூவினால் மீன் குழம்பு ரெடி!!!