ஞாயிறு, 28 ஜூன், 2015

வஞ்சரம் பிரை type 1

வஞ்சர பிரை type 1 க்கான பட முடிவு

வஞ்சரம் பிரை type 1

எப்படி செய்வது ?

வஞ்சர மீன் - 8 துண்டுகள் ,
எலும்பிச்சை சாறு - 2 Table Spoon ,
கறிவேப்பிலை - 5 இலைகள் ,  
வரமிளகாய் - 5 ,
மல்லி - 1 டீஸ்பூன் ,
பச்சை மிளகாய் - 4 ,
கசகசா - 1 ஸ்பூன் ,
ஓமம் - 1 சிட்டிகை ,
பூண்டு - 5 பற்கள் 
இஞ்சி - 1/2 இஞ்ச் ,
சீரகம் - 1 டீஸ்பூன் ,
ரவை - 1 கப் ,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் ,
உப்பு - தேவையான அளவு .


என்னென்ன தேவை ?




மீனை நன்கு 

சுத்தமாக கழுவி , 

அதனை உப்பு 

மற்றும் 

எலுமிச்சை 

சாறு சேர்த்து 

பிரட்டி 10 நிமிடம் 

பிரிட்ஜில் வைக்க 


வேண்டும் . பின்னர் 

வரமிளகாய் , பச்சை மிளகாய் , 

இஞ்சி , பூண்டு , கசகசா , சீரகம் 

,மற்றும் மல்லி ஆகியவற்றை 

தண்ணீர் சேர்த்து கெட்டியாக 

அரைத்துக் கொள்ள வேண்டும் , 

பின்பு அரைத்து வைத்துள்ள 

மசாலாவை பிரிட்ஜில் உள்ள மீனில் 

நன்கு தடவி , மீண்டும் 10 நிமிடம் 

ஊற வைக்க வேண்டும் , 


பிறகு ஒரு வாணலியை அடுப்பில் 

வைத்து அதில் எண்ணெய் 

காய்ந்ததும் , ஓமம் மற்றும் 

கறிவேப்பிலை சேர்த்து , அதில் 

உள்ள பிளவர் எண்ணையில் 

இறங்கும் வரை சிறிது நேரம் 

வதக்கி விட வேண்டும் . பின் ஊற 

வைத்துள்ள மீன் துண்டுகளை 

ஒவ்வொன்றாக எடுத்து ரவையில் 

பிரட்டி எண்ணையில் போட்டு 

முன்னும் பின்னும் பொன்னிறமாக 

பொறித்து எடுத்தல் வஞ்சரம் பிரை 

தயார் !!!!

2 கருத்துகள்:

  1. வல்லினம் மெல்லினத்திற்குச் சற்று முக்கியத்துவம் கொடுத்தால் நல்லதோ? அதோடு, எலும்பிச்சை / எலுமிச்சம்பழம் போன்றவற்றையும் சற்று மேம்படுத்தலாமோ?

    பதிலளிநீக்கு