புதன், 5 ஆகஸ்ட், 2015

சுண்டைக்காய்த் துவையல்




sundaikai thuvayal
சுண்டைக்காய்த் துவையல்
சுண்டைக்காய், குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. வயிற்றில் புழு இருந்தால் சரியாக சாப்பிட முடியாது. புண்ணும் ஏற்படும். இவற்றுக்கெல்லாம் சுண்டைக்காய்த் துவையல் கைகண்ட மருந்து. 
தேவையான பொருட்கள்: 
பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கப் 
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
புளி - கொட்டைப்பாக்கு அளவு 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வறுத்துப் பொடிக்க: 
காய்ந்த மிளகாய் - 2 
பெருங்காயம் - ஒரு சிட்டிகை 
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் 
செய்முறை: 
• கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 
• வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
• அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை வதக்கவும். 
• சுண்டைக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, பொடித்த பொடியைச் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 
• இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கீரை சாம்பார்



KEERAI SAMBAR
கீரை சாம்பார்
கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் 
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5 
தக்காளி - 1 
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
முதலில் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாற்றை பிழிந்து எடுக்கவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் போட்டு சற்று வறுத்து, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் அதில் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். 
தக்காளி வதங்கியவுடன், வேக வைத்த பருப்பையும், உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி ஊற்றவும். 
நன்கு கொதித்தப்பின், அதில் கீரையைப் போட்டுக்கிளறிவிட்டு, மிதமான தீயில் மூடி வைத்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி வைக்கவும். சுவை மிக்க கீரை சாம்பார் தயார்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வெங்காயம் தக்காளி வதக்கல்





ONION TOMATO THOKKU
வெங்காயம் தக்காளி வதக்கல் 
தேவையான பொருட்கள் 
வெங்காயம் -2 (நீள வாக்கில் நைசாக நறுக்கவும் )
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி 
மஞ்சள் தூள் -1 /2 மேஜை கரண்டி
உப்பு -தேவையான அளவு 
கரம் மசாலா -1 /2 மேஜை கரண்டி
செய்முறை 
வாணலியில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா போட்டு தாளிக்கவும் 
பின் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் 
பின் தக்காளி சேர்த்து வதக்கவும் 
வதகியே பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு,,, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குறைந்த தியில் வைத்து சுருள வதக்கி எடுக்கவும் \
கொத்தமல்லி தூவி இறக்கவும் 
சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்

தேங்காய் சாதம்




தேங்காய் சாதம்
தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 2 எண்ணெயில் கடுகு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை
பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.
சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டில் சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல்,தாளித்த கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தேவையான் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
-------
கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்
காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் 'சித்ரான்னம்' என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.
=====================
எள்ளு சாதமும் செய்யலாம்.

எலுமிச்சம்பழ சாதம்.



எலுமிச்சம்பழ சாதம்.
தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'
செய்முறை:
1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.
2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.
3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.
(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)

-------
கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்
காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் 'சித்ரான்னம்' என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.
=====================
எள்ளு சாதமும் செய்யலாம்.

புளியோதரை



புளியோதரை
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
---------
புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:
புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை:
வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.

-------
கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்
காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் 'சித்ரான்னம்' என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.
=====================
எள்ளு சாதமும் செய்யலாம்.

வாழைப்பூ கோலா உருண்டை...



என்னென்ன தேவை? 

வாழைப்பூ - ஒன்று,

சின்ன வெங்காயம் - 100 கிராம்,

பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப,

இஞ்சி, பூண்டுவிழுது - 2 டீஸ்பூன்,

பொட்டு கடலை மாவு - 250 கிராம்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம்,

முந்திரி - 10,

புளித்தமோர் - ஒரு கப்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


வாழைப்பூவை ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பு 

நீக்கவேண்டும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த 

 மோரை ஊற்றி கலக்கி அதில் ஆய்ந்த 

வாழைப்பூவையும் போடவேண்டும். பிறகு 

வடிகட்டி உப்பு  சேர்த்து குக்கரில் போட்டு 

வேகவைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் 

கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்ஸியில் 

அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு 

பாத்திரத்தில் மிகவும் பொடியாக  நறுக்கிய 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு 

விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்  கிய 

கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக 

நறுக்கிய முந்திரிப்பருப்பு, அரைத்த வாழைப்பூ 

 சேர்த்துப் பிசைய வேண்டும். இதில் 

பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் 

கொஞ்சமாக 

சேர்க்கவும்.


உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை 

மாவு சேர்ப்பதை நிறுத்திவிட வேண்டும். பின்னர் 

 இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ 

உருட்டி சிறிது நேரம் ஃப்ரிட் ஜில் வைக்க 

வேண்டும்.  தேவைபடும்போது எண்ணெயை 

நன்கு காய வைத்து அதில் இந்த 

உருண்டைகளை போட்டு  சிறிது நேரம் 

கிளறாமல் விட்டு, நன்கு வெந்தவுடன் 

இறக்கவும். இது, காய்கறி பிரியாணி மற்  றும் 

சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக 

இருக்கும்.