திங்கள், 22 டிசம்பர், 2014

பழைய சாதத்தின் மகத்துவம்




பழைய சாதத்தின் மகத்துவம்  மருத்துவ குணகங்கள்:-

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். 

பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள் இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம்.

சுரைக்காய் மோர் கூட்டு



சுரைக்காய் மோர் கூட்டு
தேவையானப்பொருட்கள்:

சுரைக்காய் - 1

தயிர் - 1 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

வெந்தயம் - 5 அல்லது 6

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சுரைக்காயின் தோலை சீவிவிட்டு, 

உள்ளிருக்கும் 

விதை மற்றும் வெள்ளைப் பகுதியை நீக்கி 

விட்டு, 

சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் 

ஆகியவற்றை 

சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் 

கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் சிறிது 

நீரைச் 

சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் 

போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் 

மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக 

விடவும். காய் வெந்ததும் அதில் அரைத்து 

வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு 

கலந்து 

ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும். பின்னர் 

அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் 

சேர்த்துக் 

கிளறி விட்டு, உடனே அடுப்பை அணைத்து 

விடவும். நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.

ஒரு வாணலியில் அல்லது தாளிக்கும் 

கரண்டியில் 

எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். 

கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் 

பெருங்காயம், 

காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை 

ஆகியவற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, 


இந்த 


தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும்.
இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 

அல்லது மற்ற சாத வகைகளுடன் தொட்டுக் 

கொள்ளவும் செய்யலாம்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

இல்லத்தரசிக்கு - யோசனைகள்



இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்...!!

நாம் சமையல் செய்யும் பொழுது நமக்கு 

தெரிந்தவற்றை மட்டும்தான் செய்வோம். 

ஆனால் நமக்கு தெரியாத பல சுலபமான 

வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன. 

அவற்றை நாம் தெரிந்து கொண்டாலே நமது 

வேலை பாதி சுலபமாகிவிடும்.


இதில் உங்களுக்குத் தெரிந்ததும் இருக்கலாம் 

தெரியாததும் இருக்கலாம். தெரிந்ததை விட்டு 

விட்டு தெரியாததை எடுத்துக் கொள்ளவும்.


குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக 

இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி 

அதில் 

போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று 

உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.


பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் 

பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் 

பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.


தேங்காய்த் துருவல் மீதியானால், அதை 

லேசாக 

வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் 

சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.


உளுந்துவடை செய்யும் போது மாவுடன் 

வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து 

கலந்து 

வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் 

மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.


கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற 

இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் 

அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.


ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் 

கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு 

சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.


தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் 

சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் 

போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.


பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், 

எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து 

அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு 

காணாமல் போய்விடும்.


வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் 

போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து 

மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் 

பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக 

இருக்கும்.


சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் 

போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள 

சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.


சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் 

தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், 

பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.


இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் 

மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி 

செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.


தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி 

பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற 

வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி 

செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை 

போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.


மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் 


தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.


பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு 

பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் 

பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் 

இருக்கும்.


வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் 

போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க 

கைகளில் உப்பை தடவிக்கொண்டு 

நறுக்கவேண்டும்.


தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது 

ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் 

தோசை நன்றாக வருவதோடு மொரு 

மொருவென இருக்கும்.


எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத 

வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய 

தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் 

விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் 

உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.


உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை 

வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது 

உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். 

இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல 

பதத்துடன் இருக்கும்.


தக்காளி குருமா செய்யும் போது சிறிது 

வெங்காயத்தை பச்சையாக அறைத்து 

ஊற்றவும், குருமா வாசனையுடன் 

சுவையாகவும் இருக்கும்.


துவரம் பருப்புக்கு பதிலாக 

பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு 

கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி 

செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் 

வாசனையாகவும் இருக்கும்.


நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 

தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல 

வாசனையுடன் இருக்கும்

வெள்ளி, 12 டிசம்பர், 2014

வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்


சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!
1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட் :
7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

முருங்கை கீரை


உடல் சூட்டை குறைக்கும் முருங்கைக்கீரை
சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron) சுண்ணாம்புசத்து (calcium) கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல்நீங்கும்.
முருங்கை காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. www.puradsifm.com
கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் (Iron)- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன.நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் பாட்டிமார்கள். 

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

மண்பானை


மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி
• நீங்கள் மினரல் வாட்டர் மட்டும் குடிப்பவரா...?
• தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..?
• ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா...?
கண்டிப்பாக உங்கள் சிறு நீரகம் செயல் இழக்க வாய்ப்பு அதிகம்.
ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்..?
வெயில் பிரதேசத்தில் வாழ்பவருக்கும் குளிர் பிரதேசத்தில் வாழ்ப்வருக்கும் உடலின் நீர் தேவை வேறுவேறு அல்லவா..?
எப்படி பொதுவாக வறையறை செய்ய முடியும்..?
நீரில் கெட்ட கிரிமிகளும் உண்டு.(இதை படிக்கும் உங்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் அந்த கிருமி உண்டு) சாதரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல்/வெந்நீரில் இவையனைத்தும் இறந்துபோகின்றன். நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன். அந்த தாதுக்கள் கிடைக்காவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கபடும். நீங்கள் சதுரகிரி/அல்லது வேறு ஏதாவது மலைப்பகுதி சென்ரு அங்கிருக்கும் நீரை பருகி பாருங்கள் எதுவும் செய்யாது. ஒரு வேளை சாதரண நீரை அருந்தி தொண்டை கட்டினாலோ அல்லது சளிபிடித்தாலோ நல்லது தான். அந்த நீர் உங்கள் உடம்பில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றுகிறது. பின்னர் பழகிவிடும்.
மினரல் வாட்டரில் கிரிமியும் இல்லை. தாதுவும் இல்லை. சிறு நீரகம் என்ன வேலை செய்யும். சிறுநீரகத்தின் வேலையே நாம் குடிக்கும் தண்ணீரை சுத்தபடுத்தி தேவையான் தாதுக்களை எடுத்துகொண்டு மற்றவற்றை வெளியேற்றுவதுதான். நீங்கள் அந்த வேலையை நிறுத்திவிட்டீர்கள். அது என்ன செய்யும்....?
போதக்குறைக்கு உடல் நீரை கேட்கிறதோ இல்லையோ இத்தனை லிட்டர் என்று நீங்கள் உள்ளே அனுப்பிகொண்டே இருந்தால் சிறுநீரகம் என்ன வேலை செய்யும்...?
இவ்வளவுதான் என கணக்கு இல்லை. உங்கள் உடம்பு எப்போது நீர் கேட்கிறதோ எவ்வளவு கேட்கிறாதோ கொடுங்கள். எப்போது சிறுநீர் கழிக்கிறீர்களோ அப்போது கொஞ்சம் நீர் அருந்துங்கள். (இது கட்டாயமில்லை ஆனால் நல்லது). 
நீரை அண்ணாந்து குடிக்காதீர்கள். அது காற்றையும் சேர்த்து உள்ளே அனுப்பும். வாய்வைத்து குடியுங்கள். நீரை மெதுவாக, வாயில் கொஞ்சம் வைத்திருந்து குடியுங்கள். உங்க உமிழ்சேர்ந்தால் இன்னும் நல்லது. இடது கையால் குடியுங்கள். கொஞ்சம் கொஞ்மாக நீரை உள்ளே அனுப்புங்கள். நீரை எப்படி வடிகட்டுவது?. மண்பானை வாங்குங்கள். முதல் நாள் இரவு அதில் தண்னீரை உற்றுங்கள். மறுநாள் அதை சாதரண பானைக்கு மாற்றிவிடுங்கள்.(குளிர் வேண்டுமென்றால் அப்படியே குடிக்கலாம்) 6 மணி நேரத்திற்கு மேல் மண்பானையில் இருக்கும் நீரில் கிரிமிகள் வெளியேற்றபடும். ஆனால் தாதுக்கள் வெளியேறாது.

புதன், 3 டிசம்பர், 2014

செவ்வாழைப்பழம்

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்....................
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் கு ணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெ ட்டிப்படும்.
சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்புதளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.
தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைபழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக்கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
மேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.
திருமணமான தம்பதியினர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.