ஞாயிறு, 24 மே, 2015

மொஹல் சிக்கன் கிரேவி

மொஹல் சிக்கன் கிரேவி க்கான பட முடிவு



மொஹல்  சிக்கன் கிரேவி

என்னென்ன தேவை?

சிக்கன் - அரைக் கிலோ


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

வர மிளகாய் - 8

மல்லி - 4 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - 3 இன்ச் அளவு

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3

எப்படி செய்வது?

சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

 பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு

 சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி 

மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து 

அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 

தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர 

மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, 

சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு 

வறுக்கவும்.

இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு 

எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் 

ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய 

வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். 

பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை 

ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த 

சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு 

கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் 

பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான மொஹல்  சிக்கன் கிரேவி ரெடி.

Chettinad பால் பணியாரம்

பால் பணியாரம் க்கான பட முடிவு



செட்டிநாடு பால் பணியாரம் !!

என்னென்ன தேவை?


பச்சரிசி -1 ஆழாக்கு

உளுத்தம் பருப்பு-3/4 ஆழாக்கு

சர்க்கரை-100கிராம்

பால்- 1/2லிட்டர்

எண்ணெய்- 1/4 லிட்டர்
உப்பு- 1சிட்டிகை
எப்படி செய்வது?

அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து 
அதிகம் 
தண்ணீர் இல்லாமல் நைஸாக 

அரைத்துக்கொள்ளவும். எண்ணெய்யைக் 
காயவைத்து அதில் அரைத்த மாவை கோலி 
அளவுள்ள உருண்டைகளாக உருட்டி போட்டு 
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பாலுடன் 
சிறிதளவு நீர் சேர்த்து காய்ச்சி சர்க்கரையை 
கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் 
பொரித்து 
வைத்துள்ள பணியாரங்களை வெந்நீரில் 
கொட்டி உடனே எடுத்து பாலில் போடவும். 
அதிகம் ஊறினால் பணியாரம் கரைந்து போகும்.

சனி, 23 மே, 2015

வாழைக்காய் பொறியல்

வாழைக்காய் பொரியல் க்கான பட முடிவு



வாழைக்காய் பொறியல் 

என்னென்ன தேவை?

வாழைக்காய் - 1,
 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 

இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு,

உப்பு - தேவைக்கு,

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், 

கடுகு - 1/2 டீஸ்பூன், 

சீரகம் - 1/2 டீஸ்பூன்.

வறுத்து, பொடிக்க...

உளுந்தம் பருப்பு - 3 டீஸ்பூன், 

துவரம் பருப்பு - 3 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - 10 இலைகள்,

காய்ந்த மிளகாய் - 2, 

எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?


வாழைக்காயை தோல் சீவி, இரண்டாக வெட்டிக்

 கொள்ளவும். மஞ்சள் தூள், இஞ்சி சேர்த்து

 மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக 

வைக்கவும் (குழைய விடாமல் வேக விடவும்).

 ஆறிய பின் வாழைக்காயைத் துருவிக்

 கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள 

பொருட்களை சில சொட்டுகள் எண்ணெய் 

சேர்த்து வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,

 சீரகம், 

பெருங்காயத் தூள் தாளித்து துருவிய

 வாழைக்காய், பொடித்த பொடி, உப்பு சேர்த்து

 நன்கு கலக்கவும். இதை சாதத்துடன் கலந்து

 சாப்பிடலாம்....

நல்லி சூப் ..

நல்லி சூப் .. க்கான பட முடிவு




நல்லி சூப் ..

என்னென்ன தேவை?

நல்லி எலும்புத் துண்டுகள் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 8(பொடியாக நறுக்கியது)

தக்காளி, பச்சைமிளகாய் - 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

எலுமிச்சை - அரை மூடி


உப்பு - தேவையான அளவு


மசாலா அரைக்க:

மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்

பூண்டு - 5

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

மசாலா அரைக்க வேண்டியவற்றை ஒன்றாக

 மிக்ஸியில் போட்டு ஒள்றிரண்டாக

 பொடிக்கவும். நல்லி எலும்புத் துண்டுகளை

 தண்ணீரில் நன்றாக அலசி குக்கரில் போடவும்.

 பின்னர் அதனுடன் தேவையான அளவு 

தண்ணீர், நறுக்கிய வெங்காயம், பச்சை

 மிளகாய், உப்பு சேர்க்கவும். பின்னர் தக்காளியை

 கைகளால் கரைத்து அதனுடன் சேர்த்து குக்கரை

 மூடவும்.

6 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

 பின் குக்கரை திறந்து தனியாத்தூள்,

மஞ்சள்தூள், அரைத்த மசாலா ஆகியவற்றைச்

 சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இறுதியில்

 எலுமிச்சைச்சாறு சேர்த்து கோத்தமல்லித்

 தழையை தூவி இறக்கவும். நல்லி எலும்புக்கு

 பதிலாக சிக்கன் அல்லது வான்கோழிக் கறி

 சேர்த்து இதே முறையில் சூப்  வைக்கலாம்.

தலபாக்கட்டி பிரியாணி

தலபாக்கட்டி பிரியாணி க்கான பட முடிவு



தலபாக்கட்டி மட்டன் பிரியாணி....

என்னென்ன தேவை?

மட்டன் - 1/2 கிலோ,
 
சீரக சம்பா அரிசி - 3 கப், 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், 

நெய் - 2 டேபிள் ஸ்பூன், 

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),

பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது),

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது),

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு,

கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது),

புதினா - 1/4 கப் (நறுக்கியது), 

தண்ணீர் - 4 1/2 கப்.

பிரியாணி மசாலாப் பொடிக்கு...

பட்டை - 4, 

சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன், 

கல்பாசி - 5, 

சீரகம் - 2 டீஸ்பூன், 

கிராம்பு - 5,

ஏலக்காய் - 5,

அன்னாசிப்பூ - 1.

எப்படிச் செய்வது?

முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் நன்கு அலசி 

தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்

 பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள

 பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து

 தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 

மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில்

 வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 

பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து 

நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு

 பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட

 வேண்டும். பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள்,

 மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது

 நேரம் பிரட்டி, பின் அரைத்து வைத்துள்ள

 பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி

 விட வேண்டும்.

பின்பு அதில் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப்

 தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு

, தீயை குறைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கி

 விட வேண்டும். விசில் போனதும், குக்கரை

 திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், மீண்டும்

 அடுப்பில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும்.

 இறுதியில் அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி,

 பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர்

 கொதித்ததும், குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை

 குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், 

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி

 ரெடி!!!