ஞாயிறு, 12 ஜூலை, 2015

Green சிக்கன் கிரவி

சிக்கன் க்கான பட முடிவு



Green சிக்கன் கிரவி 

என்னென்ன தேவை?

சிக்கன் - 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது),

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்,


கறிவேப்பிலை - சிறிது,


தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன் (துருவியது),



பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),

புதினா - 1 கப் (நறுக்கியது),

கொத்தமல்லி - 2 கப் (நறுக்கியது),

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

மிளகு - 1/2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

வெங்காயம் - 2 (நறுக்கியது),

சர்க்கரை - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

பட்டை - 1,

ஏலக்காய் - 5,

வரமிளகாய் - 2,

தண்ணீர் - 2 கப்.


எப்படிச் செய்வது?

முதலில் மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி,

புதினா, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், மிளகு,

சீரகம், பாதி வெங்காயம், பச்சை மிளகாய்

மறற்ம் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு

மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

வெங்காயத்தைப்

போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு,

ஏலக்காய், பட்டை, வரமிளகாய் சேர்த்து நன்கு

வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை

சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க

வேண்டும். பிறகு அதில் சிக்கனை போட்டு நன்கு

பிரட்டி, மசாலாவானது சிக்கனுடன் நன்கு ஒன்று

சேர்ந்த பின்னர், அதில் கறிவேப்பிலை மற்றும்

தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு,

பின் தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் வேக

வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால்,

கோவா Green சிக்கன் கிரவி ரெடி!!!

ஞாயிறு, 5 ஜூலை, 2015

செட்டிநாடு கறி பிரியாணி

செட்டிநாடு கறி பிரியாணி க்கான பட முடிவு



என்னென்ன தேவை?

பாஸ்மதி - 4கப்


அரிந்த வெங்காயம் - 2


அரிந்த தக்காளி - 2

கறிவேப்பிலை - சிறிதளவு


தயிர் - 1/2 கப்


நெய் - 2 டேபிள்ஸ்பூன்


உப்பு, எண்ணெய் - தேவைக்கு




மட்டனில் வேகவைக்க


மட்டன் - 1/2கிலோ


வரமிளகாய்த்தூள் - 2டீஸ்பூன்


மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்


இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்


கறிவேப்பிலை - சிறிதளவு


அரைக்க:

காய்ந்த மிளகாய் - 2


பச்சை மிளகாய் - 2


சின்ன வெங்காயம் - 10


பூண்டு - 10


சோம்பு - 1 டீஸ்பூன்


கிராம்பு - 2


ஏலக்காய் - 2

இஞ்சி - 1 சிறுதுண்டு


புதினா - 1கைப்பிடி


தாளிக்க:

பிரியாணி இலை - 2


கிராம்பு - 3


பட்டை - 1துண்டு


ஏலக்காய் - 2


சோம்பு - 1டீஸ்பூன்


எப்படிச் செய்வது?  

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக 


வைத்துள்ள பொருட்களைப் போட்டு சிறிது உப்பு 

மற்றும் நீர் விட்டு 3விசில் வரை வேக வைக்கவும். 

அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக 

அரைக்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற 

வைக்க்வும். கடாயில் 1டேபிள்ஸ்பூன் நெய் விட்டு 

அரிசியை 5நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும். 

வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை 

தனியாகவும் தண்ணீரை அளந்தும் வைக்கவும். 

குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய்யை விட்டு 


தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு 

தாளித்து வெங்காயம்,கறிவேப்பிலை,அரைத்த 

மசாலா,தக்காளி,மட்டன், தயிர் அனைத்தையும் 

ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். 4கப் 

அரிசிக்கு 6கப் தண்ணீர் வைக்க வேண்டும். 

மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன் மீதி 

அளவு 

நீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு மற்றும் புதினா 

சேர்க்கவும். ஆவி போனவுடன் மல்லித்தழை தூவி 

பரிமாறவும். செட்டிநாடு கறி பிரியாணி தயார் . 

ஞாயிறு, 28 ஜூன், 2015

வஞ்சரம் பிரை type 1

வஞ்சர பிரை type 1 க்கான பட முடிவு

வஞ்சரம் பிரை type 1

எப்படி செய்வது ?

வஞ்சர மீன் - 8 துண்டுகள் ,
எலும்பிச்சை சாறு - 2 Table Spoon ,
கறிவேப்பிலை - 5 இலைகள் ,  
வரமிளகாய் - 5 ,
மல்லி - 1 டீஸ்பூன் ,
பச்சை மிளகாய் - 4 ,
கசகசா - 1 ஸ்பூன் ,
ஓமம் - 1 சிட்டிகை ,
பூண்டு - 5 பற்கள் 
இஞ்சி - 1/2 இஞ்ச் ,
சீரகம் - 1 டீஸ்பூன் ,
ரவை - 1 கப் ,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் ,
உப்பு - தேவையான அளவு .


என்னென்ன தேவை ?




மீனை நன்கு 

சுத்தமாக கழுவி , 

அதனை உப்பு 

மற்றும் 

எலுமிச்சை 

சாறு சேர்த்து 

பிரட்டி 10 நிமிடம் 

பிரிட்ஜில் வைக்க 


வேண்டும் . பின்னர் 

வரமிளகாய் , பச்சை மிளகாய் , 

இஞ்சி , பூண்டு , கசகசா , சீரகம் 

,மற்றும் மல்லி ஆகியவற்றை 

தண்ணீர் சேர்த்து கெட்டியாக 

அரைத்துக் கொள்ள வேண்டும் , 

பின்பு அரைத்து வைத்துள்ள 

மசாலாவை பிரிட்ஜில் உள்ள மீனில் 

நன்கு தடவி , மீண்டும் 10 நிமிடம் 

ஊற வைக்க வேண்டும் , 


பிறகு ஒரு வாணலியை அடுப்பில் 

வைத்து அதில் எண்ணெய் 

காய்ந்ததும் , ஓமம் மற்றும் 

கறிவேப்பிலை சேர்த்து , அதில் 

உள்ள பிளவர் எண்ணையில் 

இறங்கும் வரை சிறிது நேரம் 

வதக்கி விட வேண்டும் . பின் ஊற 

வைத்துள்ள மீன் துண்டுகளை 

ஒவ்வொன்றாக எடுத்து ரவையில் 

பிரட்டி எண்ணையில் போட்டு 

முன்னும் பின்னும் பொன்னிறமாக 

பொறித்து எடுத்தல் வஞ்சரம் பிரை 

தயார் !!!!

சனி, 27 ஜூன், 2015

உப்புமா in ராகி

உப்புமா க்கான பட முடிவு



என்னென்ன தேவை?

ராகி மாவு - 1 கப்

, 
கடுகு - 1/2 டீஸ்பூன்

, 
சீரகம் - 1/2 டீஸ்பூன்

, 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

, 
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

, 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,

 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

, 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),
 

வெங்காயம் - 1 (பொடியாக 

நறுக்கியது), 

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), 


கறிவேப்பிலை - சிறிது, 


கொத்தமல்லி - சிறிது, 


உப்பு - தேவையான அளவு, 


தண்ணீர் - 2 கப், 


எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்.



எப்படிச் செய்வது?



முதலில் ஒரு வாணலியை 

அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் 

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ராகி 

மாவை போட்டு நல்ல மணம் வரும் 

வரை வறுக்க  வேண்டும். பின்னர் 

மற்றொரு வாணலியை அடுப்பில் 

வைத்து, அதில் மீதமுள்ள 

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

கடுகு மற்றும் சீரகத்தை போட்டு 

தாளித்து, பின்  கடலைப் பருப்பு, 

உளுத்தம் பருப்பு சேர்த்து 

பொன்னிறமாக வறுக்க வேண்டும். 


பின்பு அதில் கறிவேப்பிலை, 

வெங்காயத்தைப் போட்டு 

பொன்னிறமாக வதக்கி,  

தக்காளியை போட்டு, சிறிது உப்பு 

தூவி நன்கு மென்மையாக வதக்க 

வேண்டும். பிறகு அதில் தண்ணீர் 

ஊற்றி, மெதுவாக ராகி மாவை 

சேர்த்து தொடர்ந்து  கிளறி விட்டு, 

மூடி வைத்து 5 நிமிடம் குறைவான 

தீயில் தண்ணீர் வற்றும் வரை 

கொதிக்க விட வேண்டும். 

தண்ணீரானது முற்றிலும் 

வற்றியதும், அதனை  இறக்கி, 

எலுமிச்சை சாறு மற்றும் 

கொத்தமல்லியைத் தூவி பிரட்டி 

இறக்கினால்  உப்புமா in ராகி ரெடி!!!

சனி, 13 ஜூன், 2015

மீன் குழம்பு

என்னென்ன தேவை?
மீன் குழம்பு க்கான பட முடிவு


மீன் - 1/2 கிலோ,

சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது),


பூண்டு - 100 கிராம் (நறுக்கியது),


தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது),


புளி - 1 நெல்லிக்காய் அளவு,


மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,


மல்லித் தூள் - 2 டீஸ்பூன்,


நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,


கடுகு - 1 டீஸ்பூன்,


வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,


சீரகம் - 1/4 டீஸ்பூன்,


உப்பு - தேவையான அளவு,


கறிவேப்பிலை - சிறிது,


கொத்தமல்லி - சிறிது.



எப்படிச் செய்வது?



முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக 

கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை 2 

கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள 

வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் 

வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க 

வேண்டும். பின் வெங்காயம், பூண்டு மற்றும் 

தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை 

வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், 

மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 

வதக்கி, பின் புளிச்சாறு சேர்த்து கொதிக்க விட 

வேண்டும். குழம்பானது கொதிக்க 

ஆரம்பித்ததும், அதில் மீன் துண்டுகளை சேர்த்து 

2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் தீயை 

குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

மீன் நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் 

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் 

தூவினால் மீன் குழம்பு ரெடி!!!