சனி, 25 ஜூலை, 2015

செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு


செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு



தேவையான பொருட்கள்:
தேவையானவை
வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, மஞ்சள்தூள், 
தனியா தூள், தலா 1 டீஸ்பூன்;
பூண்டு, சாம்பார் வெங்காயம் – தலா 10
வர மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப (~~ 2 டீஸ்பூன்)
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய், காய்ந்த 
சுண்டைக்காய் (வத்தல்)

தயார் செய்யும் முறை:
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் 
கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, 
வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் 
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், 
மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, 
புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 
கொதிக்க விடவும்.

குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து 
வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த சுண்டை 
வத்தலை போட்டுக் கலக்கவும்.

சில்லி சோயா


சில்லி சோயா :


தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள், 
சில்லி சாஸ், மக்காச்சோள மாவு, மைதாமாவு, 
அரிசி மாவு, உப்பு ருசிக்கேற்ப, வினிகர் _ 1 டேபிள் 
ஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான 
அளவு.

அரைத்துக் கொள்ளவும்: பூண்டு _ 8 பல்லு, இஞ்சி _ 1 
அங்குலத்துண்டு, பச்சைமிளகாய் _ 2.

செய்முறை : பிரஜர்பேனில் தண்ணீர்விட்டு 
சூடாக்கவும். கொதி வரும்போது சோயா 
உருண்டைகள் சேர்த்து மூடியால் மூடி ஒரு விசில் 
வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் 
கழித்து மூடியைத் திறந்து வடிகட்டவும். 
சோயாவை நன்கு பிழிந்து எடுத்து குளிர்ந்த நீரில் 
போடவும். மறுபடியும் பிழிந்து எடுத்து தனியே 
வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நைசாக அரைத்து 
அதோடு சிறிது உப்பு, வினிகர், சில்லி சாஸ் கலந்து 
சோயாவின் மீது தெளித்து கைகளால் 
கலந்துவிடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் 
முக்கால் மணிநேரம் வைத்துவிடவும். 
வாணலியில் எண்ணெய் சூடானதும், 
ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கைகளால் பிசறிவிட்டு 
உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து 
எண்ணெயில் கொள்ளும்வரை போடுங்கள். நன்கு 
கரகரப்பாக பொரித்து எடுத்து சூடாக தக்காளி 
சாஸ§டன் சாப்பிட்டால் படு டேஸ்டியாக இருக்கும்!

கோவைக்காய் பொரியல்

கோவைக்காய் பொரியல்



தேவையானவை: 

கோவைக்காய் - 2 கப் 


உப்பு - தேவையான அளவு 

வறுத்துத் பொடிக்க: 

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி 


தனியா - 1/2 தேக்கரண்டி 


வெந்தயம் - சிறிதளவு 


மிளகாய் வற்றல்- 2 


தோல் நீக்கிய நிலக்கடலை - 1 தேக்கரண்டி


தாளிக்க: 


நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி 

கடுகு - 1 தேக்கரண்டி 


கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி 


உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி 


மிளகாய்வற்றல் - 1 


சீரகம் - 1/2 தேக்கரண்டி 


பெருங்காயம் - சிறிதளவு 


கறிவேப்பிலை - 1 இணுக்கு 
செய்முறை: 

• கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் 


வற்றல், தோல் நீக்கிய நிலக்கடலையை 

வெறும் 

கடாயில் வறுத்து ஆறியதும் பொடித்து 

கொள்ளவும். 


• கோவைக்காயை நன்றாக கழுவி நீளமாக 


வெட்டிக் கொள்ளவும். 


• கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும் 


தாளிசப் பொருட்களைத் தாளித்து 

கோவைக்காயை போட்டு நன்றாக கிளறயும். 


• 5 நிமிடம் கழித்து சிறிது நீர் விட்டு உப்பைச் 


சேர்க்கவும். 


• காய் நன்றாக வெந்ததும் பொடித்து 


வைத்துள்ள 

பொடியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிப் 

பரிமாறவும். 


• சத்தான கோவைக்காய் பொரியல் ரெடி.


புதன், 22 ஜூலை, 2015

கத்தரிக்காய் 'அசடு' என்ற கூட்டு.

கத்தரிக்காய் 'அசடு' என்ற கூட்டு.
தேவையான சாமான்கள்.
பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம்.
பச்சை மிளகாய் 5 அல்லது 6
புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு
உப்பு-1 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம்,கறிவேப்பிலை மஞ்சள் பொடி
இரண்டு சிமிட்டாக்கள்.
எண்ணெய் 2 அல்லது 3 டீஸ்பூன்.
கத்தரிக்காயை நீளவாட்டத்தில் மெல்லியதாக
நறுக்கவும்.. பச்சை மிளகாயையும் இரண்டாக
நறுக்கிக் கொள்ளவும்.துவரம் பருப்பை வேகவிட்டுக்
கொள்ளவும்.கற்சட்டியில் அல்லது பாத்திரத்தில்
2 டீஸ்பூன்கள் எண்ணெயை விட்டு, நறுக்கி
வைத்துள்ள காயையும், பச்சை மிளகாயையும் போட்டு
வதக்கிக் கொள்ளவும்.புளியைக் கரைத்துவிட்டு,
உப்பைப் போட்டு, மஞ்சள் பொடியையும் போடவும்.
"தான்" நன்றாக வெந்ததும் வெந்த துவரம் பருப்பைக்
கொட்டி, சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து
கொள்ளாமலிருந்தால் அரை டீஸ்பூன் அரிசிமாவைக்
கரைத்துவிட்டு, கொதிக்கவிடவும். சேர்ந்து
கொதித்ததும் பெருங்காயத்தைக் கரைத்துவிட்டு,
கறிவேப்பிலையைக் கிள்ளி போடவும்.எண்ணெயில்,
கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல் இவற்றைத்
தாளித்து போடவும்

ஞாயிறு, 19 ஜூலை, 2015

முருங்கைக்காய் மசாலை



முருங்கைக்காய் மசாலை 

என்னென்ன தேவை?

முருங்கைக்காய் - 5,
பூண்டு - 5 பற்கள்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு....

அரைப்பதற்கு... 


தேங்காய் - 1/4 கப், 

சோம்பு - 1/2 டீஸ்பூன். 

தாளிப்பதற்கு... 

எண்ணெய் - 2 டீஸ்பூன், 

பட்டை - 1/2 இன்ச், 

கிராம்பு - 2, 

ஏலக்காய் - 2, 

கறிவேப்பிலை - சிறிது. 


எப்படிச் செய்வது? 



முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக 

வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு 

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 

ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள 

பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு 

அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக 

வதக்கி, பின் முருங்கைக்காய், மிளகாய் தூள் 

மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு 

கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் 

தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது 

ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள 

வேண்டும். முருங்கைகாயானது நன்கு வெந்த பின், 

அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் 

தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு 

கொதிக்க விட்டு இறக்கினால், 

முருங்கைக்காய் மசாலை 
 ரெடி!!!

Vegetable Briyani

வெஜிடபுள் பிரியாணி !!

* பாஸ்மதி அரிசி 2 கப்
* சிறிய உருளைக்கிழங்கு 6
* கேரட் 2
* நறுக்கிய முட்டைகோஸ் 2 கப்
* பன்னீர் 250 கிராம்
* பெரிய வெங்காயம் 2
* தக்காளி 2
* பச்சைப்பட்டாணி ஒரு கப்
* பச்சை மிளகாய் 5
* ஏலக்காய் 6
* கிராம்பு 5
* கறுவாப்பட்டை 4
* பிரிஞ்சி இலை 2
* முந்திரி 20
* பிளம்ஸ் 35 கிராம்

* கொத்தமல்லித்தழை 1/4 கப்
* உப்பு தேவையான அளவு

* மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
* எண்ணெய் பொரிப்பதற்கு
* பட்டர் / நெய் 3 மேசைக்கரண்டி
* மிளகாய்த்தூள் சிறிது

* பட்டாணியை சிறிது உப்பு போட்டு வேக 
வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை 
களைந்து ஊற வைத்துக் கொள்ளவும்.

* தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் 
கொள்ளவும். உருளைக்கிழங்கை நீளமானத் 
துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை 
நீளமான சிறிய

* மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை 
ஒரு அங்குல நீளமான மெல்லிய துண்டாக 
நறுக்கிக் கொள்ளவும்.

* ரைஸ் குக்கரில் ஊற வைத்த அரிசியை 
போட்டு 
மஞ்சள் தூள், கறுவப்பட்டை, 3 ஏலக்காய், 
பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு 
தேவையான

* அளவு தண்ணீர் ஊற்றி குழைய விடாமல் வேக 
வைத்துக் கொள்ளவும். அரிசி அரைப்பதம் 
வெந்ததும் அதில் சிறிது உப்பு, 2 மேசைக்கரண்டி 
நெய்
அல்லது பட்டர் சேர்த்து கிளறி விடவும்.

* நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் 
தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் 

சேர்த்து பிரட்டி பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

* அதேப் போல் வெங்காயம், பன்னீரையும் உப்பு, 
மிளகாய்தூள் சேர்த்து பிரட்டி 
பொரித்தெடுக்கவும்.

* வாணலியில் ஏலக்காய், கிராம்பு, 

கறுவபட்டையை போட்டு வறுத்து மிக்ஸியில் 

கொரகொரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.

* அதே வாணலியில் பட்டர் அல்லது நெய் ஊற்றி 

இரண்டாக உடைத்த முந்திரி, பிளம்ஸை 

போட்டு 

வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி 
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, 
பெரியசீரகம் போட்டு பொரிய விடவும். 
அதனுடன் சிறிது உப்பு, நீளமாக

* நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், 
முட்டைகோஸ் போட்டு மூடி மிதமான தீயில் 7 
அல்லது 8 நிமிடங்கள் வேக விடவும்.

* அதன் பின்னர் வேக வைத்த காய்கறிகளுடன் 
நறுக்கின தக்காளியை போட்டு 4 அல்லது 5 
நிமிடங்கள் கிளறி விடவும்.

* தக்காளி கேரட், கோஸ் கலவையுடன் 
சேர்ந்ததும் வேக வைத்த பட்டாணி, வறுத்து 
பொடித்த தூள், சாதம் ஆகியவற்றை கொட்டி 
கிளறவும்.

* பின்னர் பொரித்த உருளைக்கிழங்கு, பன்னீர் 
வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுக் 
கிளறவும். இறுதியாக பொரித்த முந்திரி மற்றும் 
பிளம்ஸை
போட்டுக் கிளறவும்.

* சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி 
தயார். இதனை பரிமாறும் தட்டில் வைத்து 
மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

திங்கள், 13 ஜூலை, 2015

சுண்டைக்காய் வத்தல் குழம்பு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
தேவையானவை:
துவரம் பருப்பு.........................1 ஸ்பூன்

கடலை பருப்பு..........................1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு......................1 ஸ்பூன்
மிளகு ........................................1 ஸ்பூன்
சீரகம்...........................................1 ஸ்பூன்
வெந்தயம் ..................................1 /2 ஸ்பூன்
சுண்டவத்தல் ............................4 ஸ்பூன்
நல்லெண்ணெய்........................4 ஸ்பூன்
கடுகு.............................................1 /2 ஸ்பூன்
துவரம்பருப்பு, கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு................1 1 /2 ஸ்பூன் ..(தாளிக்க)
புளி.................................................2 எலுமிச்சை அளவு
வெல்லம்..(தேவையானால்)......கொஞ்சம்
மஞ்சள் பொடி.................................கொஞ்சம்
பெருங்காயம்...................................கொஞ்சம்
பூண்டு..தேவையானால்...............10 பல்
மிளகாய்பொடி.................................1 ஸ்பூன்
மல்லி பொடி.....................................2 ஸ்பூன்
உப்பு ..................................................தேவையான அளவு
கறிவேப்பிலை ................................1 /2 ஸ்பூன்

செய்முறை:

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் + வெந்தயம் இவற்றை கடாயில் எண்ணெய் இன்றி வறுக்கவும். சுண்டவத்தலை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, நன்கு கருப்பாகும்வரை வறுக்கவும். வறுத்த பொருட்களை மிக்சியில் பொடி செய்யவும். புளியை கொஞ்சம் நீர் ஊற்றி ஊறவைத்து கரைக்கவும். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு + கடலைப்பருப்பு போடவும். இவை சிவந்தபின், பூண்டு போட்டு வதக்கவும்.
பின் மிளகாய் பொடி + மல்லி பொடி போட்டு, ஒரு முறை கிளறியபின், உடனேயே புளிகரைசலை ஊற்றவும். (மிளகாய் பொடி ரொம்ப நேரம் இருந்தால் கருகிவிடும். வறுக்காமலும் மிளகாய் பொடியைப் போடலாம்.) இதில் மஞ்சள்பொடி, பெருங்காயம்,வெல்லம்+உப்பு போடவும். பிறகு பொடிசெய்த பருப்பை ஒரு டம்ளர் நீர் விட்டு கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதித்து, குழம்பு சுண்டி, கெட்டியாக வந்ததும், இறக்கி கறிவேப்பிலையைப் போடவும்.
இட்லி தோசைக்கும் சூப்பராக இருக்கும். தொட்டு சாப்பிட சுட்ட அப்பளம், வடகம் நல்ல துணை. வேண்டுமானால், மிளகுதக்காளி வத்தலை வறுத்தும் இதில் போடலாம்.