சனி, 25 ஜூலை, 2015

கோவைக்காய் பொரியல்

கோவைக்காய் பொரியல்



தேவையானவை: 

கோவைக்காய் - 2 கப் 


உப்பு - தேவையான அளவு 

வறுத்துத் பொடிக்க: 

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி 


தனியா - 1/2 தேக்கரண்டி 


வெந்தயம் - சிறிதளவு 


மிளகாய் வற்றல்- 2 


தோல் நீக்கிய நிலக்கடலை - 1 தேக்கரண்டி


தாளிக்க: 


நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி 

கடுகு - 1 தேக்கரண்டி 


கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி 


உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி 


மிளகாய்வற்றல் - 1 


சீரகம் - 1/2 தேக்கரண்டி 


பெருங்காயம் - சிறிதளவு 


கறிவேப்பிலை - 1 இணுக்கு 
செய்முறை: 

• கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் 


வற்றல், தோல் நீக்கிய நிலக்கடலையை 

வெறும் 

கடாயில் வறுத்து ஆறியதும் பொடித்து 

கொள்ளவும். 


• கோவைக்காயை நன்றாக கழுவி நீளமாக 


வெட்டிக் கொள்ளவும். 


• கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும் 


தாளிசப் பொருட்களைத் தாளித்து 

கோவைக்காயை போட்டு நன்றாக கிளறயும். 


• 5 நிமிடம் கழித்து சிறிது நீர் விட்டு உப்பைச் 


சேர்க்கவும். 


• காய் நன்றாக வெந்ததும் பொடித்து 


வைத்துள்ள 

பொடியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிப் 

பரிமாறவும். 


• சத்தான கோவைக்காய் பொரியல் ரெடி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக