லட்டு.. செய்வது எப்படி??
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ,
சர்க்கரை - அரை கிலோ, வெல்லம் - 100 கிராம்,
நெய் - 400 கிராம், பாதாம், பேரீச்சை, திராட்சை,
முந்திரி - தலா 25 கிராம், டைமண்ட் கற்கண்டு - 5
கிராம், பச்சைக்கற்பூரம் - கால் டீஸ்பூன்,
ஏலக்காய் - 10 கிராம், கிராம்பு - சிறிதளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவை பாத்திரத்தில்
போட்டு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு
கரைத்துக்கொள்ளவும். அடிகனமான
வாணலியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும்
மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக
பூந்திக்கரண்டியில் ஊற்றி தேய்க்கவும்.
பூந்திகள்
எண்ணெயில் விழுந்தவுடனே மெதுவாக
திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்கள்
கழித்ததும் மீண்டும் திருப்பிப் போட்டு எடுத்து
எண்ணெய் வடிசட்டியில் கொட்டி, எண்ணெயை
முழுவதுமாக வடித்துவிடவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, வெல்லம்
இரண்டையும் சேர்த்து நீர் விட்டு ஒரு கம்பி
பதத்துக்கு பாகு காய்ச்சவும் (சர்க்கரை,
வெல்லம்
சேர்ந்த பாகு கொதிக்கும்போதே முக்கால்வாசி
நெய்யை இடை இடையே விடவும்). அதற்குள்
ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை
விட்டு பாதாம், முந்திரி, திராட்சை, கிராம்பு,
பேரீச்சை ஆகியவற்றை வறுத்துச் சேர்க்கவும்.
இதில், நசுக்கிய ஏலக்காய், பச்சைக் கற்பூரம்
சேர்க்கவும். எண்ணெய் வடித்த பூந்தி, கல்கண்டு
இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
கைகளில் நெய்யை தடவிக்கொண்டு
கைபொறுக்கும் சூட்டுடனேயே லட்டுகளாகப்
பிடிக்கவும். இது பல நாட்கள் கெடாது.
குறிப்பு: இது திருப்பதி வெங்கடேசப் பெருமாள்
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக