புதன், 29 ஜூலை, 2015

கோதுமை ரவா பாயசம்


Godhuma rava payasam



கோதுமை ரவா பாயசம் 

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவா - 1/2 கப்

பால் - 2 கப்

சர்க்கரை - 3 ஸ்பூன்

உப்பு -சிறிது

ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் கோதுமை ரவையை வாணலில் 

பொன் 

நிறம் மாறும் வரை வறுக்கவும்.

பாலை காய்ச்சி அதில் ,வறுத்த கோதுமை 

ரவையை சேர்த்து,வேகவிடவும் .

அதனுடன் உப்பு சிறிது சேர்க்கவும் .

கோதுமை ரவை வெந்தவுடன் ,அதில் 

சர்க்கரை,ஏலக்காய் தூள் சேர்த்து ,கிளறி 3 

நிமிடங்கள் வேக விடவும் .

அவ்வளவுதான் கோதுமை ரவை பாயசம் தயார் .

இதில் நெய்யில் வறுத்த முந்திரியையும் 

,சேர்த்து 

கொள்ளலாம் .

சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்தும் 

செய்யலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக