வெள்ளி, 31 ஜூலை, 2015

சோயா மஞ்சூரியன்



சோயா மஞ்சூரியன் / Soya Chunks Manchurian

தேவையானவை:
சோயா சங்க்ஸ் - 150 கிராம்
வெங்காயம் - 2
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
குடைமிளகாய் ( பச்சை, மஞ்சள், சிவப்பு ) - தலா ஒன்று
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஃ புட் கலர் - சிறிது (தேவையென்றால்)
சோயா சாஸ் - சிறிதளவு
கிரீன் சில்லி சாஸ் - சிறிதளவு
டொமேடோ சாஸ் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
1.சோயா சங்க்ஸை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். பிறகு அதை நன்கு பிழிந்து தனியே வைக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிது பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

2.சோயா சங்க்ஸில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஃ புட் கலர் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

3.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஊறிய சோயா சங்க்ஸை பொரித்தெடுக்கவும்.

4.கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பிறகு பொடியாக அறிந்த வெங்காயம் போட்டு வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கின எல்லா கலர் குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

5.அதனுடன் கிரீன் சில்லி சாஸ், சோயா சாஸ், டொமேடோ சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

6.இவை அனைத்தும் பாதி வதங்கியவுடன் பொரித்து வைத்துள்ள சோயா சங்க்ஸை சேர்த்து வதக்கவும்.

7.அதனுடன் பொடியாக அறிந்து வைத்துள்ள வெங்காயத்தாளை சேர்த்து வதக்கவும். அதிகம் வதங்க தேவையில்லை.

8.சுவையான சோயா மஞ்சூரியன் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக