ஞாயிறு, 19 ஜூலை, 2015

Vegetable Briyani

வெஜிடபுள் பிரியாணி !!

* பாஸ்மதி அரிசி 2 கப்
* சிறிய உருளைக்கிழங்கு 6
* கேரட் 2
* நறுக்கிய முட்டைகோஸ் 2 கப்
* பன்னீர் 250 கிராம்
* பெரிய வெங்காயம் 2
* தக்காளி 2
* பச்சைப்பட்டாணி ஒரு கப்
* பச்சை மிளகாய் 5
* ஏலக்காய் 6
* கிராம்பு 5
* கறுவாப்பட்டை 4
* பிரிஞ்சி இலை 2
* முந்திரி 20
* பிளம்ஸ் 35 கிராம்

* கொத்தமல்லித்தழை 1/4 கப்
* உப்பு தேவையான அளவு

* மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
* எண்ணெய் பொரிப்பதற்கு
* பட்டர் / நெய் 3 மேசைக்கரண்டி
* மிளகாய்த்தூள் சிறிது

* பட்டாணியை சிறிது உப்பு போட்டு வேக 
வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை 
களைந்து ஊற வைத்துக் கொள்ளவும்.

* தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் 
கொள்ளவும். உருளைக்கிழங்கை நீளமானத் 
துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை 
நீளமான சிறிய

* மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை 
ஒரு அங்குல நீளமான மெல்லிய துண்டாக 
நறுக்கிக் கொள்ளவும்.

* ரைஸ் குக்கரில் ஊற வைத்த அரிசியை 
போட்டு 
மஞ்சள் தூள், கறுவப்பட்டை, 3 ஏலக்காய், 
பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு 
தேவையான

* அளவு தண்ணீர் ஊற்றி குழைய விடாமல் வேக 
வைத்துக் கொள்ளவும். அரிசி அரைப்பதம் 
வெந்ததும் அதில் சிறிது உப்பு, 2 மேசைக்கரண்டி 
நெய்
அல்லது பட்டர் சேர்த்து கிளறி விடவும்.

* நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் 
தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் 

சேர்த்து பிரட்டி பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

* அதேப் போல் வெங்காயம், பன்னீரையும் உப்பு, 
மிளகாய்தூள் சேர்த்து பிரட்டி 
பொரித்தெடுக்கவும்.

* வாணலியில் ஏலக்காய், கிராம்பு, 

கறுவபட்டையை போட்டு வறுத்து மிக்ஸியில் 

கொரகொரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.

* அதே வாணலியில் பட்டர் அல்லது நெய் ஊற்றி 

இரண்டாக உடைத்த முந்திரி, பிளம்ஸை 

போட்டு 

வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி 
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, 
பெரியசீரகம் போட்டு பொரிய விடவும். 
அதனுடன் சிறிது உப்பு, நீளமாக

* நறுக்கிய பச்சை மிளகாய், கேரட், 
முட்டைகோஸ் போட்டு மூடி மிதமான தீயில் 7 
அல்லது 8 நிமிடங்கள் வேக விடவும்.

* அதன் பின்னர் வேக வைத்த காய்கறிகளுடன் 
நறுக்கின தக்காளியை போட்டு 4 அல்லது 5 
நிமிடங்கள் கிளறி விடவும்.

* தக்காளி கேரட், கோஸ் கலவையுடன் 
சேர்ந்ததும் வேக வைத்த பட்டாணி, வறுத்து 
பொடித்த தூள், சாதம் ஆகியவற்றை கொட்டி 
கிளறவும்.

* பின்னர் பொரித்த உருளைக்கிழங்கு, பன்னீர் 
வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுக் 
கிளறவும். இறுதியாக பொரித்த முந்திரி மற்றும் 
பிளம்ஸை
போட்டுக் கிளறவும்.

* சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி 
தயார். இதனை பரிமாறும் தட்டில் வைத்து 
மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக