பீட்ரூட் கட்லெட்
Beetroot cutlet
என்னென்ன தேவை?
துருவிய பீட்ரூட் - 3/4 கப்,
துருவிய பனீர் - 3/4 கப்,
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1
டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
பிரெட் க்ரம்ப்ஸ் (ரஸ்க் தூள்) - தேவையான
அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட்,
பனீர், மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள்,
கடலை மாவு, உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலா
சேர்த்து நன்றாகப் பிசையவும். இந்தக் கலவை
கெட்டியாக இருக்க வேண்டும். (தளர்வாக
இருந்தால் 1 அல்லது 2 டீஸ்பூன் கடலை மாவை
சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்). ஒரு
கிண்ணத்தில் மைதா மாவைப் போட்டு, 1/4 கப்
தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து
கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் பீட்ரூட் கலவையை
சிறு சிறு வட்டமாகத் தட்டி மைதா மாவுக்
கரைசலில் ஒரு முறை முக்கி எடுத்து, ரஸ்க்
தூளில் நன்கு இரண்டு புறமும் புரட்டி ஒரு
தட்டில் வைத்துக் கொள்ளவும். இதை அரை
மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
எண்ணெயைக் காய வைத்து, தட்டி வைத்த
பீட்ரூட் கட்லெட்களை பொன்னிறமாகப்
பொரித்து எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக