என்னென்ன தேவை?
சிக்கன்- அரைகிலோ
சின்ன வெங்காயம்-கால் கிலோ
சீரகத்தூள்-5ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது- 3ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1ஸ்பூன்
வத்தல் தூள்-2ஸ்பூன்
மல்லித்தூள்-2ஸ்பூன்
தேங்காய்- அரை முறி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
எப்படி செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் அல்லது பிரஷர்
பேனில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும்
நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு
பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் சீரகத்தூள், மஞ்சள் தூள், போட்டு
வதக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி பூண்டு
விழுதை அதில் சேர்க்க வேண்டும். அதன்
பின்னர் துண்டுகளாக நறுக்கிய சிக்கனை
போட்டு உப்பு சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வதக்க
வேண்டும். பின்னர் வத்தல் தூள், மல்லித்தூள்
போட்டு 5நிமிடம் வதக்கிய பின்னர் தேங்காய்
பால் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு கொதிக்க
விடவேண்டும். அடிப்பிடிக்காமல் 30நிமிடம்
வரை வேக வைக்க வேண்டும். இறக்கிய
பின்னர் மல்லி இலைகளை அதன் மீது
தூவினால் செட்டிநாடு சிக்கன் தயார்.
இதனை சாதம் சப்பாத்தி, இட்லி, தோசை
ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.