ஞாயிறு, 26 ஜூலை, 2015

வாழை இலையின் பயன்கள்





வாழை இலையின் பயன்கள்
.
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று 


சொல்லி எத்தனையோ பாரம்பரியமான 

விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் 

கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை 

தவறவிட்டு விட்டோம்.


அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் 

சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் 

என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? 

பார்ப்போம்…


முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் 

(Germ Killer) ஆகும்.


அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் 

சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ 

அல்லது 

சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது 

மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் 

கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை 

படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், 

வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு 

முறிப்பான்கள் ஆகும்.


இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து 

விட்டால் முதலில் வாழைச்சாறு 

பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.


காடும் காடு சார்ந்த பகுதிகளில் 

வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் 

முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 

பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை 

பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.


ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை 

மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், 

மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் 

வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் 

வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். 

அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு 

செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் 

எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், 

அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் 

உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான 

உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை 

மட்டுமே. 

அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு 

சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது 

வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து 

எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு 

நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை 

பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் 

வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் 

பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு 

உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். 

உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, 

இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் 

எனப்படும் பித்தமும் தணியும்.


வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை 

(குளோரோபில்) உணவை எளிதில் 

சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் 

புண்ணை 

ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் 

தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் 

நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் 

வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், 

பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய 

உணவை எடுத்துச் செல்ல வாழை இலை 

சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே 

இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் 

மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை 

பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது 

விழாக்கள், அன்னதானம் விருந்து 

வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு 

வாழை இலைகள் தான் பெரிதும் 

பயன்படுகின்றன.


வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை 

பெற்று வருகின்றோம். அதில் வாழை 

இலையின் 

பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் 

பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

என்னென்ன தேவை?

சுண்டைக்காய் வற்றல் 1 பிடி (சுமார் 10 கிராம்), 

சாம்பார் பொடி 4 டீஸ்பூன், 

உப்பு தேவையான அளவு, 

புளி எலுமிச்சை அளவு,

 அரிசி மாவு 1 டீஸ்பூன். 

தாளிக்க: 

நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், 

பெருங்காயம் 1/2 டீஸ்பூன், 

கடுகு 2 

டீஸ்பூன்,

 வெந்தயம் 1/2 டீஸ்பூன், 

கடலைப்பருப்பு 

அல்லது துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், 

காய்ந்த மிளகாய் 4, 

கறிவேப்பிலை தேவைக்கு.


எப்படிச் செய்வது?



அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 



காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள 



பொருட்களை அதே வரிசையில் 



ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். பின் 



சாம்பார் பொடியையும் போட்டு, அதே 



எண்ணெயில் வறுத்தபின் புளிக்கரைசலை 



விடவும். உப்பு, சுண்டைக்காய் வற்றல் 



சேர்க்கவும். நன்கு கொதித்தபின் அரிசிமாவை 



சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொதிக்க 



விடவும். கெட்டியான பின் இறக்கி வைத்து 



சூடான சாதம் மற்றும் சுட்ட அப்பளத்துடன் 


பரிமாறவும்.!

கொள்ளு சுண்டைக்காய் மசாலா

கொள்ளு சுண்டைக்காய் மசாலா

என்னென்ன தேவை?

கொள்ளு 50 கிராம், 

தக்காளி 50 கிராம், 

வெங்காயம் 50 கிராம், 

எண்ணெய் 10 மி.லி., 

பச்சை மிளகாய் 3, 

உப்பு தேவைக்கு, 

சுண்டைக்காய் 75 கிராம், 

கறிவேப்பிலை சிறிது, 

சீரகம் கால் டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கொள்ளை 6 மணி நேரம் ஊற வைத்து, பிரஷர் 

குக் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் 

விட்டு சீரகம், கறிவேப்பிலை, பொடியாக 

நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் 

சேர்த்துப்பொன்னிறத்துக்கு வதக்கவும். பிறகு 

தக்காளி சேர்க்கவும். சுண்டைக்காயும் உப்பும் 

சேர்த்து வேக விடவும். கடைசியாக வெந்த 

கொள்ளு சேர்த்து நன்கு வேகவிட்டு சூடாகப் 

பரிமாறவும்.


கொள்ளு சுண்டைக்காய் மசாலா தயார் .

சுண்டைக்காய் ரோல்

சுண்டைக்காய் ரோல்

என்னென்ன தேவை?

மல்டிகிரெயின் சப்பாத்தி 2, 

சுண்டைக்காய் 75 கிராம், 

வெங்காயம் 50 கிராம்,

 எண்ணெய் 10 மி.லி.,

 உப்பு தேவைக்கேற்ப,

 பச்சை மிளகாய் 3, 

ஃபிளாக்ஸ் சீட் பவுடர் 1 டீஸ்பூன், 

பனீர் 50 கிராம், 

சீரகம் கால் டீஸ்பூன், 

கறிவேப்பிலை சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், 

கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், 

வெங்காயம் ஃபிளாக்ஸ் சீட் பவுடர் சேர்த்துப் 

பொன்னிறத்துக்கு வதக்கவும். சுண்டைக்காயும், 

உப்பும் சேர்த்து வதக்கவும். பிறகு பனீர் சேர்த்துக் 

கிளறி எடுத்துத் தனியே வைக்கவும். இந்தக் 

கலவையை சப்பாத்தியினுள் ஸ்டஃப் செய்து, 

சூடாகப் பரிமாறவும்.


சுண்டைக்காய் ரோல் ரெடி 

சுண்டைக்காய் அடை

சுண்டைக்காய் அடை

என்னென்ன தேவை?

கொள்ளு மாவு 50 கிராம், 

கம்பு மாவு 50 கிராம், 

சுண்டைக்காய் 75 கிராம், 

வெங்காயம் 50 கிராம், 

பச்சை மிளகாய் 3, 

எண்ணெய் 10 மி.லி., 

புதினா சிறிது, 

உப்பு தேவைக்கேற்ப, 

சீரகம் கால் டீஸ்பூன், 

சோம்பு கால் டீஸ்பூன், கறிவேப்பிலை 

சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் கொள்ளை வறுத்து அரைத்துத் தனியே 
வைக்கவும். பிறகு மறுபடி கடாயில் எண்ணெய் 
விட்டு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய 
பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் 
பொன்னிறத்துக்கு வதக்கவும். 
சுண்டைக்காயைத் தட்டி அதில் சேர்த்து 
வதக்கவும். உப்பு சேர்க்கவும். பிறகு அதில் 
கொள்ளு மாவையும் கம்பு மாவையும் சேர்த்து, 
தேவையான தண்ணீர் விட்டு, அரிந்த புதினா 
சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைத்து, 
சூடான தோசைக் கல்லில் அடையாக 
வார்க்கவும் . சுண்டைகை ஆடை தயார் 

சனி, 25 ஜூலை, 2015

செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு


செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு



தேவையான பொருட்கள்:
தேவையானவை
வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, மஞ்சள்தூள், 
தனியா தூள், தலா 1 டீஸ்பூன்;
பூண்டு, சாம்பார் வெங்காயம் – தலா 10
வர மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப (~~ 2 டீஸ்பூன்)
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய், காய்ந்த 
சுண்டைக்காய் (வத்தல்)

தயார் செய்யும் முறை:
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் 
கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, 
வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் 
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், 
மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, 
புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 
கொதிக்க விடவும்.

குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து 
வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த சுண்டை 
வத்தலை போட்டுக் கலக்கவும்.

சில்லி சோயா


சில்லி சோயா :


தேவையான பொருட்கள் : சோயா உருண்டைகள், 
சில்லி சாஸ், மக்காச்சோள மாவு, மைதாமாவு, 
அரிசி மாவு, உப்பு ருசிக்கேற்ப, வினிகர் _ 1 டேபிள் 
ஸ்பூன், எண்ணெய் _ பொரிக்கத் தேவையான 
அளவு.

அரைத்துக் கொள்ளவும்: பூண்டு _ 8 பல்லு, இஞ்சி _ 1 
அங்குலத்துண்டு, பச்சைமிளகாய் _ 2.

செய்முறை : பிரஜர்பேனில் தண்ணீர்விட்டு 
சூடாக்கவும். கொதி வரும்போது சோயா 
உருண்டைகள் சேர்த்து மூடியால் மூடி ஒரு விசில் 
வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் 
கழித்து மூடியைத் திறந்து வடிகட்டவும். 
சோயாவை நன்கு பிழிந்து எடுத்து குளிர்ந்த நீரில் 
போடவும். மறுபடியும் பிழிந்து எடுத்து தனியே 
வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை நைசாக அரைத்து 
அதோடு சிறிது உப்பு, வினிகர், சில்லி சாஸ் கலந்து 
சோயாவின் மீது தெளித்து கைகளால் 
கலந்துவிடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் 
முக்கால் மணிநேரம் வைத்துவிடவும். 
வாணலியில் எண்ணெய் சூடானதும், 
ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து கைகளால் பிசறிவிட்டு 
உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து 
எண்ணெயில் கொள்ளும்வரை போடுங்கள். நன்கு 
கரகரப்பாக பொரித்து எடுத்து சூடாக தக்காளி 
சாஸ§டன் சாப்பிட்டால் படு டேஸ்டியாக இருக்கும்!