ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு க்கான பட முடிவு

என்னென்ன தேவை?

அயிரை மீன் - 1/2 கிலோ, 

சின்ன வெங்காயம் - 250 கிராம் (தோலுரித்தது), 

தக்காளி - 2 (நறுக்கியது), 

பூண்டு - 10 பற்கள், 

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், 

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன், 

கடுகு - 1/2 டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு - 12/ டீஸ்பூன், 

வெந்தயம் - 1/4 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிது, 

புளி - சிறிய எலுமிச்சை அளவு, 

உப்பு - தேவையான அளவு, 

எண்ணெய் - தேவையான அளவு, 

கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க). 


அரைப்பதற்கு... 

துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன், 

வர மிளகாய் - 3. 



எப்படிச் செய்வது?  

முதலில் அயிரை மீனை நன்கு சுத்தமாக கழுவி 

தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் 

புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து சாறு 

எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் 

தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு 

மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 

அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, 

உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, 

பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு 

பொன்னிறமாக வதக்க வேண்டும். 



பின் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 

மென்மையாக வதக்க வேண்டும். பின்பு அதில் 

மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி, 

பின் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை 

போக நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து 

அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை 

சேர்த்து, உப்பு சுவை பார்த்து பச்சை வாசனை 

போக கொதிக்க விட்டு, பின் அதில் அயிரை 

மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு 

இறக்கி, 

கொத்தமல்லியைத் தூவினால், அயிரை மீன் 

குழம்பு ரெடி!!!

வெள்ளி, 31 ஜூலை, 2015

Diabeties காலிபிளவர் சப்பாத்தி




நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி

காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.
காலிபிளவரில் உள்ள சத்துக்கள்

காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது.

ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்

இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும்.

மேலும் காலிபிளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.

காலிபிளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது.

இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காலிப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.

பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கால்சியம் சத்து அதிகம் கொண்ட காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது.

மேலும், அதிக எடை போடாமல் இருக்க உதவுகிறது. இதோ அந்த காலிபிளவரில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

காலிபிளவர் சப்பாத்தி

* காலிபிளவரை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளவும்.

* பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

* துருவிய காலிபிளவர், பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

* இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான காலிபிளவர் சப்பாத்தி ரெடி.

வாழைத்தண்டு புளிக்குழம்பு



VALAITHANDU PULI KOZHAMBU
வாழைத்தண்டு புளிக்குழம்பு
வாழைத்தண்டு - கால் அடி நீளத் துண்டு
சின்ன வெங்காயம் - 6 + 4
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் -3
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெல்லம் - சுண்டைக்காய் அளவு
வாழைத்தண்டை தோல் சீவி, மெல்லிய வட்டமாக நறுக்கி, அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து சிவக்க வறுத்து, அதனுடன் 6 வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிடவும். ஆறியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய 4 வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வாழைத்தண்டை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டு லேசாக வதங்கியதும், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சுவையான வாழைத்தண்டு புளிக்குழம்பு தயார். சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்

லட்டு.. செய்வது எப்படி??

லட்டு.. செய்வது எப்படி?? க்கான பட முடிவு


லட்டு.. செய்வது எப்படி??

தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ, 
சர்க்கரை - அரை கிலோ, வெல்லம் - 100 கிராம், 
நெய் - 400 கிராம், பாதாம், பேரீச்சை, திராட்சை, 
முந்திரி - தலா 25 கிராம், டைமண்ட் கற்கண்டு - 5 
கிராம், பச்சைக்கற்பூரம் - கால் டீஸ்பூன், 
ஏலக்காய் - 10 கிராம், கிராம்பு - சிறிதளவு, 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவை பாத்திரத்தில் 
போட்டு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு 
கரைத்துக்கொள்ளவும். அடிகனமான 
வாணலியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் 
மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக 
பூந்திக்கரண்டியில் ஊற்றி தேய்க்கவும். 
பூந்திகள் 
எண்ணெயில் விழுந்தவுடனே மெதுவாக 
திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்கள் 
கழித்ததும் மீண்டும் திருப்பிப் போட்டு எடுத்து 
எண்ணெய் வடிசட்டியில் கொட்டி, எண்ணெயை 
முழுவதுமாக வடித்துவிடவும்.

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, வெல்லம் 
இரண்டையும் சேர்த்து நீர் விட்டு ஒரு கம்பி 
பதத்துக்கு பாகு காய்ச்சவும் (சர்க்கரை, 
வெல்லம் 
சேர்ந்த பாகு கொதிக்கும்போதே முக்கால்வாசி 
நெய்யை இடை இடையே விடவும்). அதற்குள் 
ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை 
விட்டு பாதாம், முந்திரி, திராட்சை, கிராம்பு, 
பேரீச்சை ஆகியவற்றை வறுத்துச் சேர்க்கவும். 
இதில், நசுக்கிய ஏலக்காய், பச்சைக் கற்பூரம் 
சேர்க்கவும். எண்ணெய் வடித்த பூந்தி, கல்கண்டு 
இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். 
கைகளில் நெய்யை தடவிக்கொண்டு 
கைபொறுக்கும் சூட்டுடனேயே லட்டுகளாகப் 
பிடிக்கவும். இது பல நாட்கள் கெடாது.

குறிப்பு: இது திருப்பதி வெங்கடேசப் பெருமாள் 
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது

சோயா மஞ்சூரியன்



சோயா மஞ்சூரியன் / Soya Chunks Manchurian

தேவையானவை:
சோயா சங்க்ஸ் - 150 கிராம்
வெங்காயம் - 2
வெங்காயத்தாள் - ஒரு கட்டு
குடைமிளகாய் ( பச்சை, மஞ்சள், சிவப்பு ) - தலா ஒன்று
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஃ புட் கலர் - சிறிது (தேவையென்றால்)
சோயா சாஸ் - சிறிதளவு
கிரீன் சில்லி சாஸ் - சிறிதளவு
டொமேடோ சாஸ் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
1.சோயா சங்க்ஸை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். பிறகு அதை நன்கு பிழிந்து தனியே வைக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிது பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

2.சோயா சங்க்ஸில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஃ புட் கலர் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

3.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஊறிய சோயா சங்க்ஸை பொரித்தெடுக்கவும்.

4.கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பிறகு பொடியாக அறிந்த வெங்காயம் போட்டு வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கின எல்லா கலர் குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

5.அதனுடன் கிரீன் சில்லி சாஸ், சோயா சாஸ், டொமேடோ சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

6.இவை அனைத்தும் பாதி வதங்கியவுடன் பொரித்து வைத்துள்ள சோயா சங்க்ஸை சேர்த்து வதக்கவும்.

7.அதனுடன் பொடியாக அறிந்து வைத்துள்ள வெங்காயத்தாளை சேர்த்து வதக்கவும். அதிகம் வதங்க தேவையில்லை.

8.சுவையான சோயா மஞ்சூரியன் தயார்.

ராகி கார புட்டு





Kara Putt


ராகி கார புட்டு

ராகி மாவு - 2 டம்ளர்,

சின்ன வெங்காயம் - 10,

பச்சை மிளகாய் - 4,

தேங்காய் - 1/2 மூடி,

உப்பு - தேவையான அளவு,

கடுகு - 1/2 தேக்கரண்டி,

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,

கறிவேப்பிலை - சிறிது,

எண்ணெய் - 2 தேக்கரண்டி.

உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, ராகி 

மாவில் 

தெளித்து பிசறவும்.

கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் 

அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும்.

தேங்காயை துருவி வைக்கவும்.

ராகி மாவை ஆவியில் வைத்து வேக விட்டு 

எடுக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக 

நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, 

உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, 

கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், மிளகாய் 

சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும், தேங்காய், வேக வைத்த 

மாவு சேர்த்து கிளறி இறக்கவும்.

வியாழன், 30 ஜூலை, 2015

கோதுமை புட்டு


wheat flour puttu


கோதுமை புட்டு 

மிகவும் சத்தானது . 
புட்டு மாவு செய்ய :
கோதுமை - 1 கி 
கோதுமையை சாதம் வேகவைப்பது போல வேக வைத்து , வடித்துக்கொளவும் .பின்பு வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும் .
புட்டு செய்ய :
தயாரித்து வைத்த கோதுமை புட்டு மாவு - 1 கப் 
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் 
வெல்லம் - 3 ஸ்பூன் (துருவியது )
ஏலக்காய் தூள் - சிறிது 
உப்பு - சிறிது 
நெய் - சிறிது 
முந்திரி - 6
செய்முறை :
கோதுமை புட்டு மாவை கொதிக்கும் நீர் சேர்த்து புட்டு செய்யும் பதத்துக்கு கிளறிக்கொள்ளவும் 
பின் அதை தேங்காய் துருவல் சேர்த்து ,இட்லி தட்டில் வேக விடவும் 
வெந்த பிறகு அதில் ஏலக்காய் ,வெல்லம் கலந்து விடவும் 
இறுதியாக நெய்யில் முந்திரி வறுத்து கலந்து சூடாக பரிமாறவும் .
சுவையான கோதுமை மாவு புட்டு தயார்