சனி, 23 மே, 2015

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி க்கான பட முடிவு



சுவையான ஸ்பெஷல் மட்டன் 

பிரியாணி:--

தேவையான பொருள்கள்: எம்பிரான் பாஸ்மதி

 அரிசி – 1 கிலோ, மட்டன் – 1 1/2 கிலோ, நெய் 250

 கிராம், தயிர் – 400 மில்லி (2 டம்ளர்), பூண்டு – 100

 கிராம், இஞ்சி – 75 கிராம் , பட்டை, கிராம்பு, ஏலம்

 – 3 வீதம், பெரிய வெங்காயம் – 1/2 கிலோ, 

தக்காளி – 1/4 கிலோ, பச்சை மிளகாய் – 50

 கிராம், எலுமிச்சை – 1, பொதினா,

 கொத்தமல்லிதழை – கையளவு, கேசரிப்பவுடர் – 
சிறிதளவு, முந்திரிப்பருப்பு – 50 கிராம், உப்பு – 

தேவையான அளவு

செய்வது எளிது, தயாராகும் நேரம்: 15 (நிமிடம்), 

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:-- 

1. வெங்காயத்தை 

பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் 

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை

 அரைத்துக்கொள்ளவும் 

3. எம்பிரான் பாஸ்மதி அரிசியைக் கழுவி 15

 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது

 நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப்

 போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய

 வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் 

வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு

 விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள

 மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது

 நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், 

உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட்

 போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர்

 வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு 

அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக 

வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு

 ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க

 விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து 

வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி

 சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து
 பிரியாணி 

மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு 

லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து 

இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும்

 முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி

 பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து 

வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.

எம்பிரான் பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, 

வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி

 மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

ஞாயிறு, 17 மே, 2015

Fish Fry

மீன் ப்ரை க்கான பட முடிவு






மசாலா மீன் ப்ரை !!

என்னென்ன தேவை?

ஊற வைப்பதற்கு...

மீன் - 5 துண்டுகள், 

தயிர் - 1 டேபிள் 
ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

அரைப்பதற்கு...

மல்லி - 1 டீஸ்பூன்,

சோம்பு - 1/2 டீஸ்பூன், 

மிளகு - 1/4 டீஸ்பூன், 

பட்டை - 1/4 இன்ச், 

கிராம்பு - 1,

சின்ன வெங்காயம் - 4-5,

பூண்டு - 2 பற்கள்.


எப்படிச் செய்வது?

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள

 பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்

 சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் மீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள்,

 மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும்

 தேவையான அளவு உப்பு சேர்த்து, அத்துடன்

 அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்கு 

பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு

 ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்

 சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, 

எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்

 பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா

 மீன் ப்ரை ரெடி!!!

சனி, 16 மே, 2015

மொச்சை மசாலா

மொச்சை மசாலா க்கான பட முடிவு



மொச்சை மசாலா 

தேவையான பொருட்கள்

ஊறவைத்த மொச்சை-3கப்

பட்டை, இலவங்கம்,
 
ஏலக்காய், அன்னாச்சி பூ,

மஞ்சள், மசாலா சாமான்கள், 

தேங்காய் துருவல் -1கப், 

பச்சை மிளகாய் -2 ,

இஞ்சி- 1துண்டு ,

உப்பு தேவைக்கு


எப்படிச் செய்வது?

ஊறவைத்த மொச்சையை நன்கு வேகவைத்து

 எடுத்து கொள்ளவும். மசாலா பொருட்களுடன்

 இஞ்சி பச்சை மிளகாய் தேங்காய் துருவலுடன்

 தண்ணீர் விட்டு மசாலா உப்பு போட்டு நன்றாக

 கிளறி இறக்கவும். மணக்கும் மொச்சை மசாலா 

 தயார்..

இறால் சில்லி

இறால் சில்லி !!! க்கான பட முடிவு



இறால் சில்லி  !!!

என்னென்ன தேவை?

இறால்(சுத்தம் செய்தது) - 200கிராம்

பெரிய வெங்காயம் - 1

குடை மிளகாய் - 1

வெங்காயத்தாள் - 2கொத்து

பூண்டு - 10

சில்லி ஃப்லேக்ஸ் - 1டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 2டேபிள்ஸ்பூன்

ரெட்சில்லி சாஸ் - 2டேபிள்ஸ்பூன்

டொமெட்டோ சாஸ் - 3டேபிள்ஸ்பூன்

மிளகு தூள் - 1டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

சர்க்கரை - 1டீஸ்பூன்

எண்ணெய் - 8டேபிள்ஸ்பூன்


எப்படிச் செய்வது?

முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு

 மிளகு தூள் சேர்த்து பிரட்டி 15நிமிடம் ஊற

 வைக்கவும். குடை மிளகாயை பெரிய

 துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய

 வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக 

நறுக்கி வைக்கவும். வெங்காயதாளையும்

 நறுக்கி கொள்ளவும். இறாலை எண்ணெயில் 

பொன்னிறமாக பொரித்தெடுத்து கொள்ளவும்.

இப்போது பொரித்த எண்ணெயிலேயே, 

வெங்காயத்தை போட்டு சிம்மில் வைத்து 

10நிமிடம் நன்றாக வதக்கவும். பிறகு அதில்

 சில்லி ஃப்லேக்ஸ், இந்த கலவைக்கு மட்டும்

 தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா 

சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து

 சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி

 பிறகு குடை மிளகாய், வெங்காய தாள் சேர்த்து

 ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து 

பிரட்டி இறக்கவும்.

வெள்ளி, 15 மே, 2015

Capsicum Aloo Curry


Capsicum Aloo Curry


என்னென்ன தேவை?
குடைமிளகாய் - ஒன்று

உருளைக்கிழங்கு - 4 சிறியது (பெரியதாக


 இருந்தால் 2)

வெங்காயம் 


- ஒன்றுதக்காளி - கால் பகுதி

பூண்டு - 3 அல்லது 4 பல்



மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி


தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி


உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டிகறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.

 ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,

 கறிவேப்பிலை தாளித்து தட்டி வைத்துள்ள

 பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 

சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் 

சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து

 குழைய வதக்கவும். பின்னர் இதனுடன் நறுக்கி

 வைத்துள்ள குடைமிளகாய் மற்றும்

 உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

காய் சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், தனியா

 தூள் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து

 வேக விடவும். உப்பின் அளவை சரிப் பார்த்துக் 


கொள்ளவும். அவ்வப்போது கிளறி விடவும். 

தண்ணீர் வற்றியதும் சுருள கிளறி அடுப்பை

 அணைத்து விடவும். சுவையான குடைமிளகாய்-

உருளைக்கிழங்கு பொரியல் தயார்.

வியாழன், 14 மே, 2015

சென்னா மசாலா !!

சென்னா மசாலா !! க்கான பட முடிவு




சென்னா மசாலா !!

என்னென்ன தேவை?
வெள்ளைக் கொண்டைக்கடலை - 200 கிராம், 
கடலைப் பருப்பு 50 கிராம்,
டீ பேக் - 2,
மஞ்சள் தூள் - சிறிது,
வறுத்தரைத்த சீரகத் தூள் - சிறிது,
பொடித்த வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள்- 1டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்- 2,
பச்சை மிளகாய்- 4,
இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
தக்காளி - 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிது,
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
உலர்ந்த கசூரி மேத்தி இலைகள்- 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
வெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, அடுத்த நாள் கடலைப் பருப்புடன் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் டீ பேக் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் (டீ பேக்-ஐ எடுத்து விடவும்) பின் ஒரு குக்கர் பேனில் எண்ணெயை காய வைத்து சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி பொன்னிறமானதும், தக்காளி, மசாலா தூள்கள் யாவற்றையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் சேர்க்கவும், பின், தண்ணீருடன் வெந்த கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு சேர்த்து சிறிது வதக்கி, கசூரி மேத்தி சேர்த்து கடலையுடன் மசித்து வேகவிடவும். நல்ல மசாலா பதம் வந்ததும், கரம் மசாலா சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு, ஸ்லைஸ் செய்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கொண்டு அலங்கரிக்கவும்

புதன், 13 மே, 2015

எலும்பு குழம்பு

எலும்பு குழம்பு க்கான பட முடிவு



ஆட்டு எலும்பு குழம்பு !!
என்னென்ன தேவை?
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
கத்திரிக்காய் - 150 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
முருங்கைக்காய் - 2
தக்காளி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் – 10
வரமிளகாய் - 10
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 4
பிரியாணி-இலை – 1
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் ஆட்டு எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை,பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் இரண்டு வெங்காயம் , தக்காளியையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,காய் நன்றாக வதங்கியதும் கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.